அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேனியை முதன்மை தொகுதியாக மாற்றுவேன்

Added : ஆக 22, 2019
Advertisement

பெரியகுளம் : ''தேனியில் அனைத்து வளர்ச்சித்திட்டங்களையும் செயல்படுத்தி முதன்மை தொகுதியாக மாற்றுவேன்,''என, ரவீந்திரநாத்குமார் எம்.பி., பேசினார்.

பெரியகுளத்தில் அ.தி.மு.க., நகர் நிர்வாகிகளுக்கு நன்றி அறிவிப்பு ஆலோசனை கூட்டம் நகர அவைத்தலைவர் கோப்பையன் தலைமையில் நடந்தது. மதுரை ஆவின் தலைவர் ஓ.ராஜா, நகர செயலாளர் ராதா, துணை செயலாளர் அப்துல்சமது, ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சையதுகான், பொருளாளர் செல்லமுத்து, ஜெ., பேரவை இணை செயலாளர் முருகானந்தம், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சந்திரசேகரன், இளைஞர் பாசறை செயலாளர் நாராணயன், வடுகபட்டி பேரூர் செயலாளர் சுந்தரபாண்டியன் உட்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

ரவீந்திரநாத்குமார் எம்.பி., பேசியதாவது:துணை முதல்வர் பன்னீர் செல்வம் தேனி மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்கள் செய்து வருகிறார். விரைவில் சட்டக்கல்லுாரி கட்டுமானப்பணி துவங்க உள்ளது. போடி-மதுரை அகல ரயில்பாதை திட்டம் விரைந்து முடிக்க வேண்டும் என லோக்சபாவில் பேசினேன். ஓராண்டிற்குள் திட்டம் முழுமைபெறும். திண்டுக்கல்-லோயர்கேம்ப் புதிய ரயில்பாதை திட்டம் குறித்து ரயில்வே அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளேன். ஆரம்பகட்ட பணி தற்போது நடந்து வருகிறது. பெரியகுளம் பகுதியில் மாம்பழக்கூழ் தொழிற்சாலை திட்டம் குறித்து பேசினேன்.தேனியை தமிழகத்தின் முதன்மை லோக்சபா தொகுதியாக மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறேன்.

பெண்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துதல், குடிநீர், விவசாயம் உட்பட அனைத்து வளர்ச்சிப்பணிகளை மே்படுத்தும் 'விஷன்' என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. துணை முதல்வர் துவக்கி வைப்பார், என்றார். மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். பெரியகுளம் வடகரையில் ஆரம்பித்து தென்கரை உட்பட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு ரவீந்திரநாத்குமார் நன்றி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X