அரசியல் செய்தி

தமிழ்நாடு

'லைப்' திட்டத்தில் பயனாளிகள் தேர்வுக்கு ஆய்வு

Added : ஆக 22, 2019
Advertisement

மூணாறு : மூணாறு ஊராட்சியினர் 'லைப்' திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்வதற்கான ஆய்வு பணிகளை துவக்கினர்.

கேரளாவில் வீடு இல்லாதவர்களுக்கு வீட்டு மனையும், நிதியுதவியும் வழங்கும் 'லைப்' எனும் திட்டத்தினை அரசு செயல்படுத்தி வருகிறது. அதற்கு பயனாளிகள் பட்டியல் தயாரிக்கும் பொறுப்பு ஊராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அதன்படி மூணாறு ஊராட்சியில் 4,464 பேர் கொண்ட பட்டியல் முதல்கட்டமாக தாயாரிக்கப்பட்டது. அதில் அரசிடம் பல்வேறு சலுகைகளை பெற்றவர்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளதால், தகுதியானவர்களை கண்டறிவதற்கான பணிகள் துவங்கின. ஊராட்சியில் உள்ள 21 வார்டுகளில் வீடுகள் தோறும் அதிகாரிகள் நேரடியாகச் சென்று தகவல்களை திரட்டி, உறுதிமொழி பத்திரத்தை பெற்று வருகின்றனர்.

அடுத்தகட்டமாக வெளியிடப்படும் தகுதியானவர்களின் பட்டியல் இடம் பெற்றவர்கள் நிலம் இல்லாததற்கான சான்றிதழ், வருமான சான்றிதழ் உட்பட பல்வேறு சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.ஆனால் ஊராட்சியினர் தாயாரித்துள்ளபட்டியலில் உள்ள அனைவருக்கும் நிலமும்,நிதியுதவியும் வழங்குவதாக தகவல் பரவியதால், தொழிலாளர்கள் பணிகளுக்கு செல்லாமல் மூணாறை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

அதனால் விண்ணப்பபடிவங்கள் மற்றும் சான்றிதழ்கள் பெற அட்ஷயா' மையங்களில் கூட்டம் அலை மோதி வருகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 'அட்ஷயா' மையங்களில் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். இத்திட்டத்திற்கான விண்ணப்ப படிவங்கள் ஜவுளி கடை முதல் பெட்டி வரை விற்கப்பட்டு வருகிறது. அவற்றை முறைபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும்.------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X