அரசியல் செய்தி

தமிழ்நாடு

அரசு ஊழியர் சங்க கட்டடத்தை ஆக்கிரமிக்க முயன்ற மார்க்சிஸ்ட்

Added : ஆக 22, 2019
Advertisement

விருதுநகர் : விருதுநகரில் அரசு ஊழியர் சங்க கட்டடத்தை அட்ஹாக் கமிட்டியுடன் இணைந்து மார்க்சிஸ்ட் கட்சியினர் கைப்பற்ற முயன்றதால் கட்டடத்தை அரசு ஊழியர்கள் சங்கத்தினர் பூட்டினர். இதோடு போலீசிலும் புகார் அளித்தனர்.

சென்னையில் நடந்த மாநில செயற்குழுக் கூட்டத்தில் விருதுநகர் மாவட்ட அரசு ஊழியர் சங்கம் கலைக்கப்பட்டது. இதற்கு விருதுநகர் அரசு ஊழியர் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய சென்னையில் உள்ள மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் சங்கம் கலைக்கப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்தனர். தற்போது நிலுவையில் உள்ளது. இந்நிலையில் மாநில நிர்வாகிகளால் விருதுநகர் மாவட்டத்திற்கு சாலைப்பணியாளர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், நகராட்சி ஊழியர்கள் தலைமையில் 'அட்ஹாக் 'கமிட்டி ( இடைக்கால நிர்வாகக்குழு )அமைக்கப்பட்டது. புதிய நிர்வாகிகளை அமைப்பது இக்குழுவின் பணியாகும்.

ஆக. 15 அன்று இக்குழுவை சேர்ந்தவர்கள் அரசு ஊழியர் சங்கத்தினரை மிரட்டி கட்டடத்தை விட்டு காலி செய்யுமாறு வற்புறுத்தினர். இந்நிலையில் அரசு ஊழியர்கள் கட்டடம் தங்களுக்கு சொந்தமானது என கோரி விருதுநகர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அட்ஹாக் கமிட்டியினரும் கட்டடம் தங்களுக்கு உரியது என வழக்கு தொடர்ந்துள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் அட்ஹாக் கமிட்டியை சேர்ந்த சாலை பணியாளர்கள் குமார் பாண்டியன், கோவிந்தன், கருப்பையா ஆகியோர் மார்க்சிஸ்ட் கட்சியினருடன் நேற்று பகல் 2:00 மணிக்கு அரசு ஊழியர் கட்டடத்தில் புகுந்து தர்ணா செய்தனர்.

இதையடுத்து அரசு ஊழியர்கள் மேற்கு போலீசாரை அழைத்தனர். அங்கு வந்த போலீசார் கட்சியினரை அப்புறப்படுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர், அட்ஹாக் கமிட்டியினரை பேச்சுவார்த்தைக்காக அழைத்து சென்றனர். அப்போது ,' அரசு ஊழியர்கள் அல்லாத அட்ஹாக் கமிட்டியினர் அரசு ஊழியர் சங்க கட்டடத்தை வன்முறை மூலம் கைப்பற்ற முயற்சிக்கின்றனர்' என அரசு ஊழியர் சங்கத்தினர் போலீசில் புகார் அளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X