அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சருக்காக 6 மணி நேரம் காத்திருப்பு: உணவு வழங்காததால் தவித்த மக்கள்

Added : ஆக 22, 2019
Share
Advertisement

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டையில் நல திட்டங்கள் பெற வந்த பயனாளிகள் அமைச்சரின் வருகைக்காக 6 மணி நேரம் காத்திருந்து நொந்து போயினர்.

அருப்புக்கோட்டை திருச்சுழி ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் அரசு நல திட்டங்கள் வழங்கும் விழா நடந்தது. ரூ.5 கோடி 43 லட்சத்து 61 ஆயிரத்து 23 ரூபாய் நிதியில் உதவிகள் வழங்கப்பட்டன. நல திட்டம் பெற அருப்புக்கோட்டை சுற்று கிராம மக்கள் 4:00 மணிக்கு நடக்க வேண்டிய நிகழ்ச்சிக்காக பகல் 1:00 மணிக்கே வரவழைக்கப்பட்டனர். 4 :00 மணிக்கும் நிகழ்ச்சி துவங்க வில்லை. மதிய உணவும் ஏற்பாடு செய்யாததால் தண்ணீரை மட்டும் குடித்து விட்டு காத்திருந்து நொந்து போயினர்.

ஒரு வழியாக அமைச்சர் இரவு 7:10 மணிக்கு வர நிகழ்ச்சி துவங்கியது. அரசு நிகழ்ச்சிக்காக மக்களை 6 மணி நேரம் காக்க வைத்த அதிகாரிகள் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் விழாவிற்காக வராத அமைச்சர் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X