பொது செய்தி

தமிழ்நாடு

10 மாவட்டங்களில் கனமழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை

Added : ஆக 22, 2019
Advertisement
10 மாவட்டங்களில் கனமழை; மீனவர்களுக்கு எச்சரிக்கை

சென்னை: 'தமிழகத்தின், 10 மாவட்டங்களில், சில இடங்களில், இன்று(ஆக.,22) கனமழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலத்தில், இரு வேறு திசைகளில் இருந்து வீசும் காற்றின் சந்திப்பு காரணமாக, இரண்டு நாட்களாக, தமிழகத்தின் வடக்கு கடலோர மாவட்டங்களிலும், உள் மாவட்டங்களிலும், மழை பெய்து வருகிறது. இன்றைய வானிலையை பொறுத்தவரை, சில இடங்களில், கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலுார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாகை ஆகிய மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம் என, வானிலை மையம் கணித்துள்ளது.


மீனவர்களுக்கு எச்சரிக்கை

தெற்கு மற்றும் மத்திய வங்க கடல் பகுதியில், மணிக்கு, 55 கி.மீ., வேகத்தில் காற்று வீசும்; அலைகள் கொந்தளிப்பாக காணப்படும். எனவே, இந்த கடல் பகுதிகளுக்கு, மீனவர்கள் இன்றும், நாளையும் மீன் பிடிக்க செல்ல வேண்டாம். படகுகளை, பாதுகாப்பாக கட்டி வைத்திருக்கவும். குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை, கடலுக்குள், வேறு எந்த நடவடிக்கைகளுக்காகவும் செல்ல வேண்டாம் என, இந்திய கடலியல் தேசிய மையம் அறிவித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X