மோடி உரை கேட்க 50,000 பேர் முன்பதிவு| Dinamalar

மோடி உரை கேட்க 50,000 பேர் முன்பதிவு

Added : ஆக 22, 2019 | கருத்துகள் (17)
Share

ஹூஸ்டன்: அமெரிக்காவில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இதுவரை 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.



latest tamil news




அமெரிக்காவின் நியூயார்க் நகரில், அடுத்த மாதம், 27ல் நடைபெறவுள்ள, ஐ.நா., பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொள்ள, பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்கா செல்கிறார். முன்னதாக, ஹூஸ்டன் நகரில், அமெரிக்க வாழ் இந்தியர்கள் கலந்து கொள்ளும் கூட்டத்தில், அவர் உரையாற்றுகிறார்.


latest tamil news




மோடி நிகழ்ச்சியை காண்பதற்கான பார்வையாளர்கள் பதிவு நடைபெற்று வருகிறது. இதுவரை, 50 ஆயிரம் பேர், முன்பதிவு செய்துள்ளனர். இதற்கு மேல் பதிவு செய்பவர்கள், காத்திருப்பு பட்டியலில் வைக்கப்படுவர் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் எரிசக்தி தலைநகராக விளங்கும் ஹூஸ்டனில் மட்டும் சுமார் 1.3 லட்சம் அமெரிக்க வாழ் இந்தியர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X