பொது செய்தி

இந்தியா

போக்குவரத்து விதி மீறல்; செப்.,1 முதல் அபராதம் உயர்வு

Updated : ஆக 22, 2019 | Added : ஆக 22, 2019 | கருத்துகள் (11)
Advertisement

புதுடில்லி: போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத்தை உயர்த்துவது உட்பட, மோட்டார் வாகன சட்டத்தின், 63 உட்பிரிவுகள், அனைத்து மாநிலங்களிலும் செப்., 1 முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.






இது குறித்து, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, கூறியதாவது: மோட்டார் வாகன சட்ட திருத்த மசோதா, பார்லிமென்டில் சமீபத்தில் நிறைவேறியது. இதையடுத்து, அச்சட்டத் திலுள்ள, 63 உட்பிரிவுகளையும், செப்., 1ல் இருந்து, நடைமுறைக்கு கொண்டு வர, முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த, 63 உட்பிரிவுகளின் கீழ், குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, அதிவேகமாக வாகனம் ஓட்டுவது உட்பட, பல்வேறு போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகை, கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது





.பெரும்பாலான சாலை விபத்துகளுக்கு, அந்த சாலையின் கட்டமைப்பே காரணமாக அமைகிறது. எனவே, விபத்துகள் அதிகம் நடைபெறும் பகுதிகளை கண்டறிந்து, குறைகளை சரி செய்வதற்காக, 14 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
22-ஆக-201916:08:37 IST Report Abuse
J.Isaac இந்த சட்டம் ஆளுகிறவர்களுக்கு எம்எல்ஏகளுக்கு எம்பிகளுக்கு பத்திய மாநில அரசு துறை அதிகாரிகளுக்கு காவல் துறை அதிகாரிகளுக்கு பொருந்துமா? பாமர நடுத்தர இரு சக்கர வாகனம் உள்ளவர்கள் மட்டுமே பாதிக்கப்படுவர்.
Rate this:
Share this comment
Cancel
Selvaraj Thiroomal - Chennai,இந்தியா
22-ஆக-201914:30:43 IST Report Abuse
Selvaraj Thiroomal சாலைவிதிகளை பின்பற்றவேண்டும் என்றே அறைகூவல், வலியுறுத்தல் செய்தால் போதுமா?? அதை அணைத்து குடிமகன்களும் தெரிந்துகொள்ள அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?? எட்டாம் வகுப்பு முதலே சாலைவிதிகளை மாணவர்களுக்கு போதிக்கவேண்டும் என்று பலமுறை நானும் எழுதிவருகிறேன்.. பிளாட்பாரத்தில் நடக்கவேண்டும், அதற்கு பிளாட்பாரம் இருந்து, அதுவும் பயன்படுத்தும் நிலையில் பராமரிக்கப்பட வேண்டும். பிளாட்பாரம் இல்லாத சாலைகளில் எதிர்பக்கமாக மட்டுமே மக்கள் நடக்கவேண்டும்.. இந்த அடிப்படை விதியாவது அனைவருக்கும் தெரியுமா?? இருசக்கர வாகனங்களை சர்வசாதாரணமாக பள்ளிக்குழந்தைகளுடன் எதிர்பக்கம் மட்டுமே ஓட்டிவருபவர்களை தினசரி பார்க்கவில்லையா?? அவர்களிடம் கேட்டுப்பாருங்கள்,, அவர்களுக்கு இப்படிப்பட்ட விதி இருப்பதே தெரியாது... தவறுகளின் உற்றுக்கண்ணை அடைக்க அரசு அவசரமாக இறங்குவதே முதல் கடமையாகும்..
Rate this:
Share this comment
Cancel
Selvaraj Thiroomal - Chennai,இந்தியா
22-ஆக-201914:19:54 IST Report Abuse
Selvaraj Thiroomal இந்திய நெடுஞ்சாலைகளே வாகனத்தின் உச்சபட்ச அனுமதிக்கப்பட்ட வேகமாக 100 கிமி/மணிக்கு என்றுதான் வரையறுத்து உள்ளது. நகர, மாநகர சாலைகளில் 40/50 அளவே அனுமதிப்பட்ட வேகமாக நிர்ணயிக்க பட்டுள்ளது.. இந்தநிலையில் இன்றைய இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் அனைத்துமே அதிவேகமாக இயக்கக்கூடிய நிலையிலே உற்பத்தி செய்யப்பட்டு நமக்கும் விற்பனையாகிறது.. இதில் தவறேதும் இல்லையா?? வேகமாக செலுத்தும் வாய்ப்பு இருக்கும்போது பயன்படுத்த நினைப்பது மனித இயல்பே.. பல வாகனங்களில் ஐந்தாவது கியர் பயன்படுத்த அடிப்படைவேகமாக 80ஐ உற்பத்தியாளர்கள் நிர்ணயித்து உள்ளார்களே.. அமைச்சர், இப்போது தயாராகிவரும் புதிய வாகனங்களில் இந்த வேகக்கட்டுப்பாட்டை வலியுறுத்தி நடைமுறை படுத்தினால் பொறுப்பான செயலாகும்.. இதனால் உற்பத்திசெலவு குறைந்து, நாமும் குறைந்த விலையில் வாகனங்களை வாங்கலாம்..விபத்துக்கள் குறையும்..ஏன் சாலைகளே கூட மேம்படும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X