சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

புரட்சிகர மின் மோட்டார்!

Added : ஆக 22, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
 புரட்சிகர மின் மோட்டார்!

மின்சாரத்தில் ஓடும் கார்கள் சாலைக்கு வந்துவிட்டன. ஆனால், அந்த மின் கார்களில் இருக்கும் மோட்டார்கள், இப்போதும் பழைய மாடல்தான். அதில் புதுமை புகுத்த வருகிறது, அமெரிக்காவிலுள்ள லீனியர் லேப்ஸ்.

மின் வாகனங்களின் நான்கு சக்கரங்களுக்கும் தனித்தனி மோட்டார் இருக்கும். இந்த மோட்டார்களில் காந்தம் மற்றும் செம்பு காயில்கள் இருக்கும். லீனியர் லேப்ஸ் உருவாக்கியுள்ள புதிய மோட்டாரில், காந்தப் புலத்தை உருவாக்கும் காயில்கள், 'டன்னல்' முறையில் உருவாக்கப்பட்டுள்ளன.

எனவே, மோட்டாருக்கு மின்சாரம் பாயும்போது, அதன் சுழல் பகுதிக்கு எப்போதும் சுழல் விசை கிடைத்தபடியே இருக்கும். தவிர, லீனியர் லேப்ஸ் மோட்டாரில், 'கியர் பாக்ஸ்' இல்லாததால், விசை துளியும் வீணாகாமல் சக்கரங்களுக்குக் கிடைக்கும். இந்த மோட்டாரின் சுழல் விசையும் பெட்ரோலிய இயந்திரங்களுடையதைவிட அதிகமாக இருப்பது, சோதனை ஓட்டங்களில் தெரியவந்துள்ளது.

லீனியர் லேப்சின் மின் மோட்டார்கள் மின்சாரத்தை வீணாக்குவதில்லை என்பதால், பெரிய அளவிலான பேட்டரிகள் காருக்கு தேவைப்படாது அல்லது இருக்கிற பேட்டரி ஆற்றலில் அதிக தொலைவு செல்ல முடியும். கியர் பாக்ஸ், பேட்டரி எடை குறைவதாலும், 10 முதல், 20 சதவீதம் அதிக தொலைவு செல்ல முடியும். அடுத்த சில ஆண்டுகளில், லீனியர் லேப் மோட்டார்கள் சாலைக்கு வந்துவிடும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nagarajan Duraisamy - Fremont,California,யூ.எஸ்.ஏ
22-ஆக-201910:16:03 IST Report Abuse
Nagarajan Duraisamy மிக பயனுள்ள கட்டுரை. நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X