பொது செய்தி

தமிழ்நாடு

ஆசிரியர் தகுதித்தேர்வில் 99.9 சதவீதம் பேர் 'பெயில்'

Updated : ஆக 22, 2019 | Added : ஆக 22, 2019 | கருத்துகள் (97)
Advertisement

சென்னை : டெட் (TET) எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வில் ஒரு சதவீதத்திற்கும் குறைவானர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். 99.9 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர்.





6 முதல் 8 ம் வகுப்புகளுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஜூன் 9 ம் தேதி நடந்தது. மொத்தம் 3,79,733 பேர் தேர்வு எழுதினர். இரண்டு தாள்களாக இந்த தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்பட்ட இந்த தேர்வில் 82 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி பெறலாம். இந்நிலையில் முதல் தாள் தேர்வு முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. இதில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்திருந்தனர். மீதமுள்ள 99 சதவீதம் பேர் தோல்வி அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.





இந்நிலையில் 2 ம் தாள் தேர்வு முடிவுகள் நேற்று (ஆக.,21) இரவு இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இரண்டாம் தாளில் 0.08 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். 99.9 சதவீதம் பேர் தோல்வி அடைந்துள்ளனர். தேர்வு எழுதிய 3,79,733 பேரில் 324 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். 1 ம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு வரை பாடம் நடத்த முதல் தாளிலும், 6 முதல் 8 ம் வகுப்புகளுக்கு பாடம் நடத்த 2 ம் தாளிலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Advertisement




வாசகர் கருத்து (97)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
madhavan rajan - trichy,இந்தியா
23-ஆக-201915:03:32 IST Report Abuse
madhavan rajan பால் செய்தவர்கள் குறைவாக இருப்பதால் அவர்கள் எப்படி பாஸ் செய்தார்கள் என்று ஒரு கமிஷன் போட்டு 99.9 சதவிகித மக்களுக்கு தெரியாதது எப்படி அவர்களுக்கு மட்டும் தெரிந்தது என்று விசாரணை செய்யவும். இதில் எதோ சாதி இருக்கிறது என்று சுடலை அறிக்கை விட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
Rate this:
Share this comment
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
23-ஆக-201914:43:26 IST Report Abuse
Swaminathan Chandramouli இது தான் தமிழகத்தின் லட்சணம், ஐம்பது ஆண்டு திராவிட கட்சிகளின் ஆட்சியில் வேறு என்ன எதிர் பார்க்க முடியும். திருவள்ளூரை கூட தாண்ட முடியாது நம் தமிழக வாசிகள்
Rate this:
Share this comment
Cancel
ashak - jubail,சவுதி அரேபியா
23-ஆக-201908:09:54 IST Report Abuse
ashak பல கருத்துக்கள் ஆசிரியர்களை தாக்கியே போடப்பட்டு உள்ளது, ஆனா இந்த ஆசிரியர்கள் கற்பித்ததால் தான் பல மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்
Rate this:
Share this comment
N.K - Hamburg,ஜெர்மனி
23-ஆக-201914:41:02 IST Report Abuse
N.Kஇந்த ஆசிரியர்கள் கற்பித்து தேர்ச்சி பெற்றார்களா, இல்லை இவர்கள் விடைத்தாள்களை திருத்த தெரியாமல் திருத்தி, மதிப்பெண்களை அள்ளி போட்டு தேர்ச்சி பெற்றார்களா என்று தெரிவேண்டுமானால் தேசிய அளவில் நடக்கும் போட்டி தேர்வுகளில் மாணவர்கள் செயல்பாடு எப்படி என்று பார்த்தல் தெரியும்...
Rate this:
Share this comment
ashak - jubail,சவுதி அரேபியா
23-ஆக-201923:14:15 IST Report Abuse
ashakஆமாம் அப்படித்தான் பல தமிழர்கள் வெளிநாடுகளில் இன்னும் பல உயர்பதவிகளில் இருக்கிறார்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X