பெட்ரோல் டேங்க் வேகன் ரயில் தடம்புரண்டது: ஆப்பரேட்டர் சாதுரியத்தால் அசம்பாவிதம் தவிர்ப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல் டேங்க் வேகன் ரயில் தடம்புரண்டது: ஆப்பரேட்டர் சாதுரியத்தால் அசம்பாவிதம் தவிர்ப்பு

Added : ஆக 22, 2019
Share
சங்ககிரி: சங்கிகிரி, இந்தியன் ஆயில் பிளான்ட்டுக்கு, பெட்ரோல் கொண்டுசென்ற, டேங்க் வேகன் ரயில் தடம் புரண்டது. ஆனால், இன்ஜின் ஆப்பரேட்டர், சாதுரியமாக நிறுத்தியதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.சேலம் மாவட்டம், சங்ககிரியிலுள்ள, இந்தியன் ஆயில் பிளான்ட்டிலிருந்து, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர் மாவட்டங்களுக்கு, 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, 400

சங்ககிரி: சங்கிகிரி, இந்தியன் ஆயில் பிளான்ட்டுக்கு, பெட்ரோல் கொண்டுசென்ற, டேங்க் வேகன் ரயில் தடம் புரண்டது. ஆனால், இன்ஜின் ஆப்பரேட்டர், சாதுரியமாக நிறுத்தியதால், அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
சேலம் மாவட்டம், சங்ககிரியிலுள்ள, இந்தியன் ஆயில் பிளான்ட்டிலிருந்து, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர் மாவட்டங்களுக்கு, 20 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, 400 டேங்கர் லாரிகள் மூலம், 600க்கும் மேற்பட்ட, 'பங்க்'குகளுக்கு, பெட்ரோல், டீசல் வினியோகிக்கப்படுகிறது. அதற்காக, கேரளா, தமிழகத்திலுள்ள ஆயில் பிளான்ட்டிலிருந்து, டேங்க் வேகன் ரயில் மூலம், சங்ககிரி பிளான்ட்டுக்கு, பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் கொண்டு வந்து நிரப்பப்படுகிறது. அதன்படி, நேற்று காலை, 6:30 மணிக்கு, கோவையிலிருந்து, 70 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட, 50 டேங்க்குகளில், பெட்ரோல், டீசல் ஏற்றிவந்த வேகன் ரயில், சென்னை - ஈரோடு ரயில்வே பாதையிலிருந்து, சங்ககிரி பிளான்ட்டுக்கு சென்றுகொண்டிருந்தது. ஆனால், சங்ககிரி ரயில்வே ஸ்டேஷன் அருகே, செங்காளிக்காடு பகுதியில், தண்டவாளத்திலிருந்து, ரயில் தடம் புரண்டது. உடனடியாக, இன்ஜின் ஆப்பரேட்டர், சாதுரியமாக நிறுத்தியதால், பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து, ரயில்வே பராமரிப்பு பணியாளர்கள், தண்டவாளங்களை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால், தண்ணீர்பந்தல்பாளையம் ரயில்வே கேட் மூடப்பட்டு, வாகன ஓட்டிகள், 5 கி.மீ., சுற்றி, பால்மடை வழியாக சென்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X