புதுடில்லி : முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டது ஜனநாயக படுகொலை என காங்., செய்தி தொடர்பாளர் சுர்ஜிவாலா தெரிவித்துள்ளார்.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நேற்று இரவு டில்லியில் சிபிஐ அதிகாரிகளால் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சுர்ஜிவாலா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்,
சிதம்பரத்தின் கைது மத்திய அரசின் ஜனநாயக படுகொலையை காட்டுகிறது. தனிப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைக்காக சிபிஐ.,யை அரசு பயன்படுத்தி வருகிறது. சிதம்பரத்தின் பெயர் முதல் எப்ஐஆர்.,ல் இல்லை. அப்ரூவரான ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிதம்பரத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவே ஒரு குற்றவாளியை போல் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிதம்பரத்திற்கு எதிராக எந்த குற்றமும் எப்ஐஆர் அல்லாத குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படவில்லை. கார்த்தி சிதம்பரத்திடம் 4 முறை விசாரிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டு, பின் விடுதலை செய்யப்பட்டார். அந்த விபரங்கள் ஏதும் குற்றப்பத்திரிகையில் இடம் பெறவில்லை என தெரிவித்துள்ளார்.
சிபிஐ தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சிதம்பரத்திடம் அமலாக்கத்துறையும் விசாரணையை துவக்க உள்ளது. முன்னதாக சிபிஐ அலுவலகத்தில் முறைப்படி சிதம்பரத்திற்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE