இந்திராணி யார்?: கார்த்தி கைவிரிப்பு

Updated : ஆக 22, 2019 | Added : ஆக 22, 2019 | கருத்துகள் (75)
Share
Advertisement

புதுடில்லி : இந்திராணி முகர்ஜி மற்றும் அவரது பீட்டர் முகர்ஜியை வாழ்நாளில் பார்த்ததே இல்லை என சிவகங்கை எம்.பி.,யும், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகனுமான கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.



latest tamil news


ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் நேற்று இரவு ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதை அடுத்து, சென்னையில் இருந்து இன்று (ஆக.,22) காலை டில்லி சென்றடைந்தார் கார்த்தி சிதம்பரம். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இது என்னை தந்தையை மட்டும் குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை இல்லை. காங்., கட்சியை குறிவைத்து எடுக்கப்பட்டது. திமுக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ள ஜந்தர்மந்தருக்கு செல்ல உள்ளேன்.


latest tamil news


பீட்டர் முகர்ஜி மற்றும் இந்திராணி முகர்ஜியை என் வாழ்நாளில் நான் சந்தித்ததே இல்லை. நான் சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது தான் இந்திராணியை ஒருமுறை பார்த்துள்ளேன். அவர்கள் நிறுவனத்தை சேர்ந்த எவரிடமும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நான் பேசவில்லை.

காஷ்மீரில் 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ஜந்தர் மந்தரில் திமுக தலைமையில் நடக்கும் போராட்டத்தில் காங்., உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் கலந்து கொள்ள உள்ளன. அதில் எனது தந்தை சிதம்பரம் கைது செய்யப்பட்ட விவகாரத்திற்கு எதிராகவும் குரல் எழுப்பப்பட உள்ளது. எனது தந்தை கைது செய்யப்பட்டதற்கு ஸ்டாலினும் நேற்று கண்டனம் தெரிவித்திருந்தார் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (75)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
23-ஆக-201921:42:27 IST Report Abuse
Jayvee kanimozhi யார் ? கார்த்திக் வெக்கம்
Rate this:
Cancel
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
23-ஆக-201914:39:31 IST Report Abuse
Swaminathan Chandramouli கார்த்தி சிதம்பரத்தை இந்திராணி யார் என்று கேட்டால் அவர் உடனே இது தெரியாதா இந்திராணி இந்திர லோகத்தை ஆளும் இந்திரனின் மனைவி என்று பளீச்சென்று பதில் சொல்லுவார்
Rate this:
Cancel
23-ஆக-201910:34:02 IST Report Abuse
கோகுல், மதுரை உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X