பகடையாக்குது பாக்.,: தெறிக்குது திமுக

Updated : ஆக 23, 2019 | Added : ஆக 22, 2019 | கருத்துகள் (369)
Share
Advertisement
புதுடில்லி : காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரித்துள்ள நிலையில், திமுக மட்டும் அதனை எதிர்த்து டில்லியில் போராட்டம் அறிவித்தது. திமுக.,வின் இந்த நிலைப்பாட்டை பாக்., தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளது. இதை எதிர்பார்க்காத திமுக அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து

புதுடில்லி : காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை இந்தியாவில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும் ஆதரித்துள்ள நிலையில், திமுக மட்டும் அதனை எதிர்த்து டில்லியில் போராட்டம் அறிவித்தது. திமுக.,வின் இந்த நிலைப்பாட்டை பாக்., தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ளது. இதை எதிர்பார்க்காத திமுக அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.latest tamil news
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 மற்றும் 35 ஏ சட்டப்பிரிவுகளை ரத்து செய்வதாக மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது. இதற்கு மாயாவதி, அகிலேஷ், சந்திரபாபு நாயுடு, அதிமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால் திமுக - காங்., மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

காஷ்மீரில் 370 ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து டில்லி ஜந்தர் மந்திரில் இன்று (ஆக.22) ஆர்ப்பாட்டம் நடத்தியது.


latest tamil news
370 சட்டப்பிரிவை இந்தியா ரத்து செய்ததற்கு உலக நாடுகள் பலவும் ஆதரவு தெரிவித்து வருகின்றன. இதனால் மோடி அரசுக்கு எதிராக என்ன விஷயம் கிடைக்கும் என காத்துக் கொண்டிருந்த பாக்., திமுக.,வின் ஆர்ப்பாட்டத்தை பயன்படுத்திக் கொண்டுள்ளது.

பாகிஸ்தானில் உள்ள சில ஊடகங்கள், "இந்தியாவில் 2019 ம் ஆண்டு தேர்தலில் 3வது பெரிய கட்சியாக வெற்றி பெற்ற திமுக, மோடி அரசின் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கும் முடிவுக்கு எதிராக போராட்டம் அறிவித்துள்ளது" என குறிப்பிட்டு செய்தி வெளியிட்டு வருகின்றன.


latest tamil news
இதனை சிறிதும் எதிர்பார்க்காத திமுக தலைமையும், கட்சியினரும் கலக்கத்தில் உள்ளனர். பாகிஸ்தானின் இந்த செயல், திமுக, பாக்.,கிற்கு ஆதரவான கட்சி என்ற தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இதை சமாளிப்பதற்காக, காஷ்மீரில் 370 பிரிவு நீக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம் என இதுவரை கூறி வந்த திமுக, தற்போது காஷ்மீரில் அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதை எதிர்த்து மட்டுமே போராட்டம் நடத்துகிறோம் என மாற்றி கூறிக்கொண்டு இருக்கிறது.

டில்லியில் நடந்த போராட்டம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து கட்சிகள் மற்றும் அதன் தலைவர்களுக்கு நன்றி. சிதம்பரம் கைது முழுக்க முழுக்க அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து சென்றது அவமானமானது. கண்டிக்கத்தக்கது. மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஜோக்கர். உள்ளாட்சி தேர்தல் நடத்துவதை எதிர்த்து திமுக வழக்கு தொடரவில்லை என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (369)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr.T.Senthilsigamani - Srivilliputtur,இந்தியா
28-ஆக-201905:59:48 IST Report Abuse
Dr.T.Senthilsigamani ஸ்டாலினின் செயல் கண்டனத்திற்குரியது .திமுக ஒரு பிரிவினைவாத ஆதரவு கட்சி. இவர்கள் தான் தனித்தமிழ் கோஷங்கள் போட்டவர்கள்.மத்திய அரசு திமுகவின் நடவடிக்கைகளை கண்காணிக்க வேண்டும்
Rate this:
Cancel
mohankumar - Trichy,இந்தியா
27-ஆக-201921:34:48 IST Report Abuse
mohankumar பாகிஸ்தானில் இம்ரான் முழு மெஜாரிட்டி இல்லை அதனால் அடுத்தத்தேர்தலில் பாகிஸ்தானில் இருவரும் கூட்டு சேர்ந்து போட்டியிட்டால் முழு மஜுரிட்டி வந்து விடும் அதனால தான் இம்ரனும் இவர்களை அழைக்கிறார் . வைகோவே வாயை மூடி கொண்டு hospitalil ஜுரம் என பொய் கூறி படுத்து கிடக்கிறார் உனக்கு கேட்ட நேரம் ராகுல் பிரதமர் என்று எப்போது கூறினாரோ அப்போதே இருவருக்கும் கேடு தொடங்கி விட்டது ஸ்டாலினை பார்க்க ராகுல் விரும்பவில்லை ராகுலை பார்க்க ஸ்டாலின் விரும்பவில்லை அதனால் தான் டில்லி செல்லவில்லை
Rate this:
Cancel
shrinivaasan s - Bangalore,இந்தியா
25-ஆக-201913:30:47 IST Report Abuse
shrinivaasan s இந்த திருடன் ஸ்டாலினை எப்ப உள்ளே புடிச்சு போடப்போறிங்க..இவன் சிதம்பரத்தை போல ஒரு தேச துரோகி .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X