போனோமே ‛போட்டோ வாக்...| chennai | Dinamalar

போனோமே ‛போட்டோ வாக்'...

Updated : ஆக 22, 2019 | Added : ஆக 22, 2019
Share
சென்னை போட்டோ வாக் அமைப்பானது கடந்த 12 ஆண்டுகள் இயங்கி வருகின்றது.இதில் பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் ஒய்வு பெற்ற ஊழியர்கள் வரை உறுப்பினர்களாக உள்ளனர்.இந்த அமைப்பின் நோக்கம் சென்னையின் அழகை அணு அணுவாக படம் எடுப்பதுதான்.மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை உறுப்பினர்கள் அனைவரும் ஒரு இடத்தில் ஒன்று கூடி அங்கு போட்டோவாக் செல்வர்.இதுவரை 190



latest tamil news


சென்னை போட்டோ வாக் அமைப்பானது கடந்த 12 ஆண்டுகள் இயங்கி வருகின்றது.இதில் பள்ளி செல்லும் குழந்தைகள் முதல் ஒய்வு பெற்ற ஊழியர்கள் வரை உறுப்பினர்களாக உள்ளனர்.


latest tamil news



இந்த அமைப்பின் நோக்கம் சென்னையின் அழகை அணு அணுவாக படம் எடுப்பதுதான்.மாதத்தின் முதல் மற்றும் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை உறுப்பினர்கள் அனைவரும் ஒரு இடத்தில் ஒன்று கூடி அங்கு போட்டோவாக் செல்வர்.இதுவரை 190 போட்டோ வாக் நடந்துள்ளது ஒவ்வொரு வாக்கிலும் ஐம்பதிலிருந்து நுாறு பேர் வரை கலந்து கொள்வர்.


latest tamil news


Advertisement

கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை விமானநிலையத்தின் பின் பகுதியில் உள்ள ‛கவுல்பஜார்' என்றழைக்கபடும் மல்லிகை பூக்கள் மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்யப்படும் இடத்தை படமெடுக்க சென்றிருந்தனர்.


latest tamil news


இந்த அமைப்பின் உறுப்பினர் ஜி.வி.பாலசுப்பிரமணியன் அழைப்பின் பேரில் நானும் போயிருந்தேன்.சென்னையின் மையப்பகுதியில் இன்னமும் பூக்களும் காய்கறிகளும் விளைச்சல் நடைபெறுகிறது என்பது ஒரு ஆச்சர்யம்தான், ரியல் எஸ்டேட்காரர்கள் இந்த இடத்தை விவசாயம் செய்ய விட்டு வைத்திருப்பது இன்னும் ஒரு ஆச்சர்யம்,விமானம் மிக அருகில் தரை இறங்குவது ஏறுவதும் மேலும் ஒரு ஆச்சர்யம்.


latest tamil news


நாங்கள் போயிருந்த போது சரியான மழை, விடாமல் பெய்ததால் அதிகம் படம் எடுக்கமுடியவில்லை. அந்த மழையிலும் அந்தப்பகுதியின் அழகை படம் எடுத்த உறுப்பினர்களில் அருண் சந்திரசேகரன்,அருண் ரமணன்,பாலாஜி,சிவ சந்துரு,பாஷா அமீன்,ஜி.வி.பாலசுப்பிரமணியன் மற்றும் பாலாஜி ராமச்சந்திரன், ஆகியோரின் படங்களுடன் நான் எடுத்த படங்களையும் இங்கே தந்துள்ளேன்.


latest tamil news


இந்த அமைப்பில் உறுப்பினராவதற்கு என்.ராமசாமி எண்:9841098406,நவீன்குமார் 9940013232 ஆகியோரை தொடர்புகொள்ளவும்.


latest tamil news



-எல்.முருகராஜ்murugaraj@dinamalar.in

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X