இந்திராணி வாக்குமூலம்: சிதம்பரம் சிக்கியது எப்படி?

Updated : ஆக 22, 2019 | Added : ஆக 22, 2019 | கருத்துகள் (64)
Share
Advertisement

புதுடில்லி : ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்தின் முன்னாள் இயக்குனரான இந்திராணி முகர்ஜி, கடந்த ஆண்டு சிபிஐ.,யிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.



latest tamil news


முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம் கைதுக்கு முக்கிய காரணம் இந்திராணி முகர்ஜி என்ற பெண் அளித்த வாக்குமூலம்தான். எப்படி என்பதை இந்த தொகுப்பில் பார்ப்போம். மும்பையை தலைமையிடமாகக் கொண்டு ஐ.என்.எக்ஸ். மீடியா பிரைவேட் லிமிடெட் எனும் நிறுவனத்தை இந்திராணி முகர்ஜியும், அவர் கணவர் பீட்டர் முகர்ஜியும் 2007ம் ஆண்டில் துவங்கினர்.

இதன்படி, அப்ரூவராக மாறிய இந்திராணி முகர்ஜி, 2018 ம் ஆண்டு பிப்ரவரி 17 ம் தேதி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையிடம் வாக்குமூலம் அளித்தார். அதில், "நானும், தனது கணவர் பீட்டர் முகர்ஜியும் 2006 ம் ஆண்டு, அப்போதைய மத்திய நிதியமைச்சராக இருந்த சிதம்பரத்தை அவரது அலுவலகத்தில் சென்று சந்தித்தோம். அப்போது அவர், தனது மகன் கார்த்தி சிதம்பரத்தை சந்திக்கும்படியும், கார்த்தியின் தொழிலுக்கு உதவும் படியும் கேட்டுக் கொண்டார். டில்லி ஹயத் ஓட்டலில் கார்த்தியை சந்தித்தோம். அவர் எங்களிடம் 1 மில்லியன் டாலர் லஞ்சமாக கேட்டார்" என கூறினார்.


latest tamil news



இந்திரா முகர்ஜியின் இந்த வாக்குமூலம் தான் சிதம்பரத்திற்கு எதிராக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை முன்வைக்கும் முக்கிய ஆதாரமாக உள்ளது.

இந்திரா முகர்ஜி மற்றும் கார்த்தியின் திட்டப்படி, கார்த்திக்கு சொந்தமான ஏஎஸ்சிபிஎல் நிறுவனத்திற்கு ஆதரவாக 700,000 டாலர் (ரூ.3.10 கோடி) மதிப்பிலான 4 இன்வாய்ஸ் தயாரித்துள்ளனர். இதன் மூலம் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு முறைகேடாக வெளிநாட்டு அந்நிய முதலீடு பெறப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐஎன்எக்ஸ் மீடியாவின் பங்குகள் 46 சதவீதமாக உயர்ந்தது. ரூ.4.62 கோடிக்கு பதிலாக சட்ட விரோதமாக ரூ.305 கோடி பிரீமியமாக பெறப்பட்டுள்ளதாகவும் இந்திராணி கூறி இருந்தார்.


latest tamil news



இந்திராணியின் இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் 2018 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கார்த்தியும் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு சிதம்பரத்திடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, நிதியமைச்சக ஆவணங்கள் மற்றும் இந்திராணியின் வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே சிதம்பரம் பதிலளித்தார். சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிக்கவில்லை என மூத்த அதிகாரிகள் கூறி உள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
24-ஆக-201905:24:54 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பத்து வருடங்கள் கழித்து குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்ப்பு. சிபிஐ இடம் ஒரு ஆதாரமும் இல்லை. சிறையில் இருக்கும் கொலை குற்றவாளியின் வாக்குமூலம்.. வேறென்ன சொல்ல முடியும்?
Rate this:
Sathya Dhara - chennai,இந்தியா
24-ஆக-201913:55:00 IST Report Abuse
Sathya Dhara சிபிஐ இடம் என்ன ஆதாரம் உள்ளது ..? என்ன இல்லை என்பது உங்களுக்கு எப்படி தெரியும். தயவு செய்து உச்ச நீதி மன்றம் செல்லுங்கள். உங்களையும் கூண்டில் ஏற்றி விசாரணை செய்ய சொல்லுங்கள்....
Rate this:
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
22-ஆக-201922:45:02 IST Report Abuse
Allah Daniel அட "பகுத்தறிவு" பம்புசெட்டுகளா...இந்தம்மா மூஞ்சியை கிண்டலடிக்கிறதுக்கு முன்னாடி...உங்க "கனி" அக்கா முஞ்சை கொஞ்சம் பாத்துட்டு வாங்க..
Rate this:
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
23-ஆக-201909:51:44 IST Report Abuse
Chowkidar NandaIndiaஎன்னங்க நீங்க....
Rate this:
Cancel
oce - kadappa,இந்தியா
22-ஆக-201920:11:10 IST Report Abuse
oce . "ஐயோ கொலைபண்றாங்க" கொலைபண்றாங்க. தள்ளிக்கொண்டு போகும் போது அது பக்கத்தில் இருந்தவர் கொடுத்த குரல்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X