தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

Updated : ஆக 22, 2019 | Added : ஆக 22, 2019 | கருத்துகள் (2)
Share
சென்னை : அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் வேலூர், கடலூர், விழுப்புரம், நீலகிரி, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், தர்மபுரி, தேனி, கோவை, திண்டுக்கல், ஈரோடு,

சென்னை : அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.



latest tamil news




சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் வேலூர், கடலூர், விழுப்புரம், நீலகிரி, திருவண்ணாமலை, நாகப்பட்டினம், தர்மபுரி, தேனி, கோவை, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருவாரூர், தஞ்சை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காரைக்கால் மற்றும் புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு நேரங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.


latest tamil news




தென் மேற்கு வங்கக் கடல் சீற்றத்துடன் காணப்படுவதாலும், மணிக்கு 45 முதல் 50 கி.மீ., வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதாலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம். கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் மற்றும் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் தலா 10 செ.மீ., மழை பெய்துள்ளது. நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 8 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X