அரசியல் செய்தி

தமிழ்நாடு

யாரையும் திட்டமிட்டு கைது செய்ய அவசியமில்லை: தமிழிசை

Added : ஆக 22, 2019 | கருத்துகள் (8)
Advertisement

தஞ்சை : தஞ்சையில் பாஜக சார்பில் தேர்தல் பொறுப்பாளர்கள் பயிற்சி முகாம் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது; பாஜக யாரையும் திட்ட மிட்டு கைது செய்ய வேண்டிய அவசியம் இல்லை. சிதம்பரம் மீது தவறு இருப்பதால்தான் சிபிஐ அதிகாரிகள் அவரை கைது செய்திருக்கிறார்கள். இந்திராணி முகர்ஜி அப்ரூவர் ஆனதால் தான், தற்போது ஒன்றன் மீது ஒன்றாக 4 வழக்குகள் உள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில் ஊழல் இல்லாத கட்சி நாங்கள் மட்டும்தான். அதற்காகத்தான் மீண்டும் மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள். சிதம்பரம் கைது நடவடிக்கையில் உள்நோக்கம் எதுவும் இல்லை. வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு 27 மணி நேரம் தொலைத் தொடர்புக்கு அப்பால் இருந்துவிட்டு நான் தலைமறைவாக வில்லை என சொல்வது வேடிக்கையாக உள்ளது.

வீட்டைப் பூட்டிக் கொண்டு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்காததால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அதிகாரப்பூர்வமாக தவறு செய்து இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக ராகுல், பிரியங்கா பேசி வருகின்றனர். ஊழல்வாதிகளுக்கு கட்சிதான் துணை இருக்கும். விசாரணையில் தவறு செய்யவில்லை என்றால் சட்ட ரீதியாக நிரூபித்து வெளியே வரட்டும். காஷ்மீர் பிரச்னைக்காக டில்லியில் திமுக நடத்தக்கூடிய ஆர்ப்பாட்டம் தேவையில்லாத ஆர்ப்பாட்டம். இதன் மூலம் திமுக தனிமைப்படுத்தபடும். தொண்டர்களே இந்த போராட்டத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. இவர்களுக்கும் காஷ்மீர் பிரச்னைக்கும் என்ன தொடர்பு. இவர்கள் அறிவித்த போராட்டத்தை பாகிஸ்தான் ஊடகங்கள் பாராட்டுகிறது என்றால் இவர்களுக்கு என்ன தேசபக்தி இருக்கப் போகிறது. அங்குள்ள குடும்ப அரசியலை காப்பாற்றுவதற்காக இங்கு குடும்ப வாரிசுகளை வைத்துக் கொண்டு ஆட்சி நடத்தக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்துகிறது. அங்கு 370 சட்டம் திரும்பப் பெற்று அதன் மூலம் சிறுபான்மையாக உள்ள வர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்க வாய்ப்பாக இருக்கும் இதனை தடுக்கும் ஸ்டாலினின் திமுக சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான கட்சி என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சுந்தரம் - Kuwait,குவைத்
22-ஆக-201917:42:55 IST Report Abuse
சுந்தரம் கடந்த ஐந்தாண்டுகளில் ஊழல் இல்லாத கட்சி நாங்கள் மட்டும்தான். சூப்பர் நகைசுவை
Rate this:
Share this comment
Cancel
Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா
22-ஆக-201916:24:19 IST Report Abuse
Sathyanarayanan Bhimarao தியாகிப் பட்டம் வாங்கப் பார்க்கும் எதிர்க்க கட்சியினர். ஊழல் குற்றத்துக்காக சிறைக்குப் போவதை விட சரியோ தவறோ ஏதோ ஒன்று, மைய அரசை கண்டித்து சிறைக்குப் போய் போராடி உள்ளே வந்தோம் என்று சொல்லிக் கொல்லப் பார்க்கிறார்கள். அன்று அப்பா செய்த வேலையை இன்று மகன் செய்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
puratchiyalan - Nagercoil,இந்தியா
22-ஆக-201916:00:11 IST Report Abuse
puratchiyalan அடுத்த கட்சி ஆட்சிக்கு வந்தா தான் தெரியும், ஊழல் செய்தீர்களா இல்லையா என்று.... இது இயல்பு..
Rate this:
Share this comment
Cheran Perumal - Radhapuram,இந்தியா
22-ஆக-201916:48:33 IST Report Abuse
Cheran Perumalகாங்கிரஸ் மற்றும் திமுக அவர்கள் ஆட்சியில் இருக்கும்போதே ஊழல் செய்கிறார்கள் என்று வெளிப்படையாக தெரிந்ததே, அது எப்படி. ஊழலுக்கு எதிரானவர்கள் என்று ஒரு காலத்தில் பார்க்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர் இப்போது ஊழலை ஆதரிக்கும் கட்சியாக மாறியதுதான் கேவலம்....
Rate this:
Share this comment
madhavan rajan - trichy,இந்தியா
22-ஆக-201917:34:33 IST Report Abuse
madhavan rajanதங்களை கூட்டணியில் ஏற்றுக்கொண்டு சில சீட்கள் வாங்கிக்கொடுத்தவர்களுக்கு இந்த நன்றிக்கடன்கூட செய்யவில்லையென்றால் எப்படி? அவர்கள் ஊழல் எதிர்ப்பையெல்லாம் கைவிட்டு ரொம்பநாள் ஆகிவிட்டது. 2004 ல் UPA அரசை மத்தியில் ஆதரித்ததே இந்த ஊழல் ஒழிப்பு போராளிகள்தான். இவர்களுக்கு இந்திராவின் ஊழல் தெரியாதா அல்லது ராஜீவின் ஊழல் தெரியாதா? கருணாவை ஆதரிக்கவில்லையா? ஜெ வை ஆதரிக்கவில்லையா? இப்போதைக்கு மூச்சுவிட ஆக்சிஜன் தேவை. அதை கொடுப்பவர்கள் எவ்வளவு ஊழல் செய்திருந்தாலும் பரவாயில்லை. ஆதரிக்கலாம்....
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
22-ஆக-201917:44:07 IST Report Abuse
சுந்தரம் திமுக 67 ல் ஆட்சியை பிடித்ததில் இருந்தே ஊழல் என்பது தெரிந்தது. ஆனாலும் அவர்களுடன் கூட்டணி வைத்தபோது அவர்கள் ஊழலே செய்யாதவர்கள் என்றல்லவா நாம் பேசிக்கொண்டிருந்தோம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X