பொது செய்தி

இந்தியா

திறந்து வைத்த அலுவலகத்தில் உறங்கிய சிதம்பரம்

Updated : ஆக 22, 2019 | Added : ஆக 22, 2019 | கருத்துகள் (49)
Share
Advertisement
புதுடில்லி: கடந்த காங்கிரஸ் ஆட்சியில், சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த போது சிபிஐ அமைப்பிற்கு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். தற்போது, மோசடி வழக்கில் கைதாகியுள்ள அவர், அந்த அலுவலகத்தில் தான் நேற்று (ஆக.21) இரவு விசாரிக்கப்ட்டு, அங்கேயே ஓய்வு எடுத்தார்.சிபிஐ அமைப்புக்கு புதிய அலுவலகத்தை கடந்த 2011ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை
P Chidambaram, CBI Office, Home Minister, chidambaram, cbi, சிதம்பரம், சிபிஐ,

புதுடில்லி: கடந்த காங்கிரஸ் ஆட்சியில், சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்த போது சிபிஐ அமைப்பிற்கு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். தற்போது, மோசடி வழக்கில் கைதாகியுள்ள அவர், அந்த அலுவலகத்தில் தான் நேற்று (ஆக.21) இரவு விசாரிக்கப்ட்டு, அங்கேயே ஓய்வு எடுத்தார்.

சிபிஐ அமைப்புக்கு புதிய அலுவலகத்தை கடந்த 2011ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், உள்துறை அஐமச்சராக இருந்த சிதம்பரம் ஆகியோர் திறந்து வைத்தனர். இதன் பின்னர், அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர் குறிப்பேட்டில், சிதம்பரம், '1985 ம் ஆண்டு முதல் சிபிஐ அமைப்புடன் நெருங்கி பணியாற்றி வருகிறேன். இந்த புதிய அலுவலகத்தை பார்ப்பதில் பெருமையாக உள்ளது. இந்த இடம் சிபிஐ அமைப்பை மேலும் வலிமைபடுத்தட்டும்' என்ற வாழ்த்து செய்தியை பதிவு செய்திருந்தார். தொடர்ந்து, விழாவில் அமைச்சர்கள் அனைவரும், புதிய அலுவலகத்தை சுற்றிப் பார்த்தனர்.


மன்மோகன் சிங் தலைமையிலான ஆட்சியின்போது, 2011ம் ஆண்டு டில்லியில் புதிய சிபிஐ அலுவலகம் திறக்கப்பட்டது. அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம் விழாவில் சிறப்பு விருந்தனராக கலந்து கொண்டார்.

latest tamil news

இந்நிலையில், ஐஎன்எக்ஸ் மோசடி வழக்கில், கைது செய்யப்பட்ட சிதம்பரம், அவர் திறந்து வைத்த அலுவலகத்தில் உள்ள அறை எண் 3ல் வைக்கப்பட்டுள்ளார். இந்த அறை முன்பு 2 பேர் காவலுக்கு வைக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு முழுவதும் அந்த அறையில் தான் சிதம்பரம் இருந்துள்ளார். கைதுக்குபின்னர், நேற்று(ஆக.,21) சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தவில்லை. இன்று காலை, சிதம்பரத்திற்கு, அவரது வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவு வழங்கப்பட்டது. இதன் பின்னரே அவரிடம் விசாரணை நடந்தது.


latest tamil newsAdvertisement
வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
24-ஆக-201916:51:45 IST Report Abuse
Malick Raja சிதம்பரம் குற்றவாளி அல்ல ... விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு கைது செய்து காவலில் விசாரிக்கிறார்கள் .. பைத்தியங்கள் பலருக்கும் விவரம் தெரியாமல் தெறிக்கவிட்டுக்கொண்டிருப்பது பைத்தியம் மேலும் பைத்தியம் ஆகுமே தவிர குறையாது .. சிதம்பரம் ஒன்னும் ரயில்வே பிளாட்பாரத்தில் டீக்கடை வைத்திருந்தவர் அல்ல .. அவர் செட்டி நாடு அரசரின் வாரிசுகளில் ஒரு அங்கம் .. இந்த விவரமே பல கூமுட்டைகளுக்கும் தெரியாது .. எதையாவது வன்மமாக சொல்வதை தொழிலாக சிலர் பல பெயர்களில் கருத்துக்கூறுவதையும் சைபர் பிரிவு கண்காணிக்கும் உரிய நேரத்தில் நடவடிக்கையும் வரும் ..காலச்சக்கர சுழற்சியில் வீழ்ச்சி இப்போது .. வருங்காலத்தில் சுழலும் வீழ்ச்சியில் அழியப்போகும் கும்பலுக்கு காத்திருக்கிறது பேரழிவு என்பது மட்டும் தெளிவு என்பதில் ஐயமே இல்லை
Rate this:
Cancel
narayanan iyer - chennai,இந்தியா
23-ஆக-201913:36:32 IST Report Abuse
narayanan iyer இதெல்லாம் ஒரு செய்தியா? தலையங்கம் விறுவிறுப்பாக இருக்கவேண்டும்
Rate this:
Cancel
Krish Sami - Trivandrum,இந்தியா
23-ஆக-201911:05:34 IST Report Abuse
Krish Sami @புகழ்: ஜெயலலிதா மரணம் பற்றி கேவலமாக பேசுபவர், பத்து வருடங்களுக்கும் மேலாக சக்க நாற்காலியில் கட்டுண்டு கிடந்த திருவாரூர் தீய சக்தி கருணாநிதி என்ன பாவத்தை செய்ததால் அவ்வாறு துன்பம் அனுபவித்தார் , எனவும் எண்ணிப்பார்க்கட்டும். ஊரை அடித்து உலையில் போட்ட உத்தமன் அல்லவா அவர்?
Rate this:
karutthu - nainital,இந்தியா
23-ஆக-201913:39:21 IST Report Abuse
karutthuஅதில் சின்ன பையனுக்கும் பங்குண்டு ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X