நீதிபதி அமர கூறியும் மறுத்த சிதம்பரம்

Updated : ஆக 22, 2019 | Added : ஆக 22, 2019 | கருத்துகள் (85)
Advertisement
INX media,CBI, P Chidambaram, judge, Chidambaram, custody, சிதம்பரம், நீதிபதி,

புதுடில்லி: ஐஎன்எக்ஸ் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட சிதம்பரத்தை, இருக்கையில் அமரும்படி நீதிபதி கூறினார். ஆனால், சிதம்பரம் அதற்கு மறுப்பு தெரிவித்தார்.

ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள், ரோஸ் அவென்யு வளாகத்தில் உள்ள சிபிஐ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். சிதம்பரம் புன்னகைத்தவாறே கோர்ட் வளாகத்திற்கு வந்தார். சிபிஐ சார்பில் துஷார் மேத்தாவும், சிதம்பரம் சார்பில் கபில் சிபல் மற்றும் அபிஷேக் மனு சிங்வியும் ஆஜராகி வாதங்களை முன் வைத்தனர். அப்போது, சிதம்பரம் குற்றவாளி கூண்டில் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த நீதிபதி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் சிதம்பரத்தை அமரும்படி கூறினர். இதற்காக, நாற்காலியும் கொண்டு வரப்பட்டது.

ஆனால், இதனை ஏற்க மறுத்த சிதம்பரம்,'' வேண்டாம்... வேண்டாம்... பரவாயில்லை... நான் நிற்கிறேன்'' என பதிலளித்தார். தொடர்ந்து, விசாரணை முடியும் வரை குற்றவாளி கூண்டிலேயே நின்றார்.


அனைத்து கேள்விக்கும் பதில்வழக்கு விசாரணையின் போது, வழக்கு குறித்து விளக்கமளிக்க சிதம்பரம் அனுமதி கேட்டார். ஆனால், சிபிஐ தரப்பு வழக்கறிஞர் துஷார் மேத்தா எதிர்ப்பு தெரிவித்தார். நீதிபதி அனுமதி கொடுத்ததை தொடர்ந்து சிதம்பரம் விளக்கம் அளித்தார்.


அப்போது அவர் கூறியதாவது:சிபிஐ தாக்கல் செய்த கேள்வி பதிலை நீதிபதி பார்க்க வேண்டும். அதில், நான் பதிலளிக்காத கேள்வி எதுவும் இல்லை. அதிகாரிகள், எனக்கு வெளிநாட்டு வங்கி கணக்கு உள்ளதா என கேட்டனர். நான் இல்லை என பதில் அளித்தேன். எனது மகனுக்கு வெளிநாட்டு வங்கிகணக்கு உள்ளதா என கேட்டனர். அதற்கு, உள்ளது என பதில் அளித்தேன். வெளிநாட்டு வங்கிக்கணக்கு துவக்க, கார்த்தி ரிசர்வ் வங்கி அனுமதி பெற்றுள்ளார்.

இந்த வழக்கில், எந்த முன்னேற்றமும் ஏற்பட போவது இல்லை என்பதால், சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கொடுக்க தேவையில்லை. ஆதாரங்கள் மற்றும் சாட்சிகளை அழிக்கவும் மாட்டேன். தப்பி ஓடவும் மாட்டேன் என விளக்கம் அளித்தார்.
சிதம்பரத்தை காவலில் எடுத்து விசாரிப்பதற்காக சி.பி.ஐ. கூறிய 5 காரணங்கள்:
* விசாரணைக்கு சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை. எந்த கேள்விக்கும் பதில் அளிக்கவில்லை.
எதுவுமே பேசவில்லை. பேசாமல் இருப்பது அடிப்படை சுதந்திரமாக இருக்கலாம். ஆனால் அவர் வழக்கு விசாரணைக்கு எதிராக செயல்படுகிறார்.
* சிதம்பரம் மீதான வழக்கு பண மோசடி வழக்கு என்பதால் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்.
* ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் சிதம்பரத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான போதிய ஆதாரங்கள் உள்ளது.
* அவரை மேலும் விசாரணை நடத்திட இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் விசாரிக்க சி.பி.ஐ.க்கும் உரிமையும், கடமையும் உள்ளது.

* ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் இன்னும் மிகப்பெரிய சதித் திட்டங்கள் இருக்கக் கூடும் என்பதால் அதை வெளிக்கொண்டு வர காவலில் எடுத்து விசாரிப்பது அவசியம்.

Advertisement
வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R GANAPATHI SUBRAMANIAN - Madipakkam, Chennai,இந்தியா
29-ஆக-201909:26:42 IST Report Abuse
R GANAPATHI SUBRAMANIAN ப.சி. ரொம்ப நல்லவருங்க. ஆனால், பழய கூற்று "ஆதாயமில்லாமல், செட்டி ஆற்றோடு போவானா" தப்பு என்று ஆகி விடுமோ.
Rate this:
Share this comment
Cancel
logi - karur,இந்தியா
26-ஆக-201914:06:14 IST Report Abuse
logi GST VARI TAMILNADULA BUSINESS எல்லாம் கானா போச்சு. கர்னாடவுல சாப்பாடுக்கு 12% gst தமிழ்னாட்டுல 18% gst hotela இது எப்டி ஓரே நாடு ஓரே gst .
Rate this:
Share this comment
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25-ஆக-201903:42:13 IST Report Abuse
skv srinivasankrishnaveni இந்தாளுக்கு என்னங்க பல மில்லியங்ளே சொத்துக்கள் சேர்த்தாச்சு நம்ம நாட்டின் பணவீக்கம் இந்த எக்ஸ் நிதிமந்திரியாலேயேதான் என்றாலும் கண்டுக்காமல் போயிடும் நீதிபதிகிலேதான் மேக்சிமம் இருக்கானுக ஏண்டா சுதந்திரம் வாங்கினாங்க என்று பல கிளாமர் பேசுறாங்கலே சரிதானா???????//எல்லா அரசியல்வியாதிகளும் கோடி லே சேர்த்துண்டு Jaaliyaaga இருக்கானுக இதுதான் உண்மை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X