திருநெல்வேலி: குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சுற்றுலா பயணியர் குளிக்க, தடை விதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில், நேற்று பகலில், பலத்த மழை பெய்தது. இதனால், குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.நேற்று பிற்பகல், 3:30 மணியில் இருந்து, மெயின் அருவியில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனால், பயணியர் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டது.பழைய குற்றாலத்தில், நேற்று மாலை, அருவியில் கொட்டிய வெள்ளம், படிகள் வழியாக இறங்கியது. ஐந்தருவியிலும் ஒரு சேர தெரிவது போல, வெள்ளம் கொட்டியது. இன்றும், இதே நிலை நீடிக்க வாய்ப்புள்ளது.