நிரவ் மோடியின் காவல் செப்.,19 வரை நீட்டிப்பு

Updated : ஆக 22, 2019 | Added : ஆக 22, 2019 | கருத்துகள் (2)
Advertisement
Nirav Modi, remand,  custody, U.K., prison, நிரவ் மோடி,

லண்டன்: ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர், லண்டனிலிருக்கும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வைர வியாபாரி நிரவ் மோடியின் நீதிமன்ற காவல், அடுத்த மாதம், 19 வரை, நீட்டிக்கப்பட்டுள்ளது.

மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்த வைர வியாபாரி, நிரவ் மோடி, 48, பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று, அதை திருப்பி செலுத்தாமல், வெளிநாடு தப்பி சென்றார். இந்த வழக்கை, சி.பி.ஐ., மற்றும் அமலாக்க துறை விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஐரோப்பிய நாடான, பிரிட்டன் தலைநகர், லண்டனில் பதுங்கி இருந்த நிரவ் மோடியை, அந்நாட்டு போலீசார், கடந்த மார்ச்சில் கைது செய்தனர்.






நிரவ் மோடியை, இந்தியா கொண்டு வரும் முயற்சியில், அமலாக்க துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அவரது ஜாமின் மனு, பல்வேறு முறை நிராகரிக்கப்பட்ட நிலையில், தென்மேற்கு லண்டனில் உள்ள, வான்ட்ஸ்வொர்த் சிறையில், அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், லண்டனில் உள்ள 'வெஸ்ட்மினிஸ்டர்' மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில், 'வீடியோ கான்பரன்சிங்' மூலம், நிரவ் மோடி ஆஜர்படுத்தப்பட்டார். அவரது நீதிமன்ற காவலை, அடுத்த மாதம், 19 வரை நீட்டித்து, நீதிபதி உத்தரவிட்டார். மேலும், 'நிரவ் மோடியை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு விசாரணை, அடுத்த ஆண்டு, மே 11ல் துவங்கி, ஐந்து நாட்கள் நடைபெறும்' என, அவர் அறிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raghunathan Nagarajan Ragu Naga - Atlanta,யூ.எஸ்.ஏ
23-ஆக-201903:01:32 IST Report Abuse
Raghunathan Nagarajan Ragu Naga ஒரு நிரபராதி விசாரணையின்றி தண்டிக்கப்படக்கூடாது என்பதில் மாற்று கருத்து இல்லை. அதற்காக ஒரு திருடன் (உண்மையிலேயே வங்கியில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பி சென்று மாறுவேடம் போட்டு மறந்து வாழ்ந்து கொண்டு இருப்பவன்) இங்கிலாந்து கோர்ட்டில் விசாரணைக்காக குறைந்த பட்சம் 2 ஆண்டுகளாவது வாதாடி விட்டு பின்பு இந்திய கோர்ட்டுகளில் இன்னும் 5 ஆண்டுகள் வாதாடி….. பரவாயில்லையே. இதுபோல பலரும் வங்கிகளில் கடன் வாங்கி விட்டு, வெளிநாடுகளில் பதுங்கி விட்டு முதல் வகுப்பு சிறைகளில் வாசம் செய்யலாம் என்று தோன்றி விடாதா. நீதி மன்றங்கள் இன்னும் விரைவாக செயல் படவேண்டும். காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதியாகத்தான் கருத வேண்டி உள்ளது.
Rate this:
Share this comment
Cancel
22-ஆக-201921:26:40 IST Report Abuse
யாரோ //நிரவ் மோடியை நாடு கடத்துவது தொடர்பான விசாரணை அடுத்த ஆண்டு மே 11 ல் தொடங்கி 5 நாட்கள் நடைபெறும். இவ்வாறு நீதிபதி கூறினார்.// இந்த இத்துப்போன ஆங்கிலேயர் வகுத்த சட்டங்கள் தாம் இன்றும் நமது நாட்டில் உள்ளன. இவர்கள் தீர்ப்பை இழுத்து அடிப்பதற்கு முன்பே குற்றவாளியே செத்து விடுவான். சபாஷ்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X