சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவி கடத்தி கொலை வாலிபர் மீது குண்டர் சட்டம்

Updated : ஆக 22, 2019 | Added : ஆக 22, 2019
Advertisement
 நெல்லை, மாணவி, கடத்தி, கொலை, வாலிபர், மீது, குண்டர் சட்டம்

திருநெல்வேலி:திருமணத்திற்கு மறுத்த மாணவியை கொலை செய்த வாலிபர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.
திருநெல்வேலி, மானுார் அருகே தென்கலத்தை சேர்ந்த மதார் மைதீன் மகள் ஆஷிகா பர்வீன், 17. கடந்த ஆண்டு கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புக்கு சென்று வந்தார். அப்போது அங்கு பழகிய வாலிபர் சுந்தரராஜ், 20. அவரை திருமணம் செய்துகொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறி கடத்தினார். 2018 டிச. 20ல் மூலைக்கரைப்பட்டி அருகே பைக்கில் அழைத்துச் சென்றவர் கத்தியால் குத்தி மாணவியை கொலை செய்தார். இந்த வழக்கில் சுந்தரராஜ் ஏற்கனவே கைதானார். தற்போது குண்டர் சட்டத்தின் கீழ் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X