ஆகஸ்ட் 23, 1914 டி.எஸ்.பாலையா:
துாத்துக்குடி மாவட்டம், சுண்டங்கோட்டையில், 1914, ஆக., 23ல் பிறந்தார். சிறு வயது முதல், சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தார்.
நாடகங்களில் நடிக்க துவங்கியவர், 1936ல், சதிலீலாவதி என்ற படத்தில் அறிமுகமானார். அதன் பின், 1937ல், தியாகராஜ பாகவதர் நடித்த, அம்பிகாபதி படத்தில் வில்லனாக நடித்தார்.
தில்லானா மோகனாம்மாள், காதலிக்க நேரமில்லை, ஊட்டி வரை உறவு உள்ளிட்ட, சில நகைச்சுவை படங்களிலும் நடித்தார். சிவாஜியுடன், திருவிளையாடல் படத்தில், பாகவதராக இவர் நடித்த நடிப்பு, காலத்தால் அழியாதது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக, கதாநாயகன், வில்லன், நகைச்சுவை நடிகர் என பல்வேறு, 'கெட்டப்'பில் நடித்தவர். 1972, ஜூலை, 22ல் காலமானார்.
டி.எஸ்.பாலையா, பிறந்த தினம் இன்று.