நாட்டை வலுவாக்கிய ஒப்பந்தம்!

Added : ஆக 22, 2019
Advertisement
 நாட்டை வலுவாக்கிய ஒப்பந்தம்!

நாட்டை வலுவாக்கிய ஒப்பந்தம்!

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவின் பல்வேறு சாதனைகளில், பஞ்சாப், அசாம் மற்றும் மிசோரம் உடன்படிக்கைள் மிகவும் முக்கியமானவை. இதன் மூலம், பல ஆண்டுகளாக அங்கு நிலவி வந்த வன்முறைகளுக்கு முடிவு கிடைத்தது. இந்த ஒப்பந்தங்கள், மிக அமைதியான முறையில், பரஸ்பர மரியாதை மற்றும் புரிதலுடன் செய்யப்பட்டன. இது, நாட்டை மேலும் வலுவாக்கியது.ராகுல்காங்., தலைவர்
அவமானத்தை பொறுக்க முடியாது!

கோடிக்கணக்கான தலித் சகோதர - சகோதரிகளின், கலாசார குறியீடான ரவிதாஸ் கோவிலை, பா.ஜ., அரசு இடித்தது. அதை எதிர்த்து குரல் கொடுக்கும் ஆயிரக்கணக்கான தலித்களை, அடித்து விரட்டுகிறது, கண்ணீர் புகை குண்டு வீசுகிறது, கைது செய்கிறது. இது உணர்வுப்பூர்வமான விவகாரம். தலித் மக்களின் கோரிக்கை, அவமானப்படுத்தப்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாது.பிரியங்காகாங்., பொது செயலர்
எதிர்மறை சிந்தனை!
சட்ட அமலாக்க நிறுவனங்களும், நீதித் துறையும், தங்கள் கடமையை சரிவர செய்து வருக்கின்றன. ஆனால், காங்கிரஸ் கட்சி, எதிர்மறையான சிந்தனையுடன் செயலாற்றி வருகிறது. நாட்டில் முதல்முறையாக, ஓர் ஊழல் குற்றச்சாட்டை, புரட்சியாக மாற்றும் முயற்சியில், காங்., தலைமை ஈடுபட்டுள்ளது.முக்தர் அப்பாஸ் நக்விசிறுபான்மையினர் விவகாரத்துறை இணை அமைச்சர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X