அமலாக்க அலுவலகத்தில் ராஜ் தாக்கரே ஆஜர்

Added : ஆக 22, 2019
Advertisement
 அமலாக்க அலுவலகத்தில் ராஜ் தாக்கரே ஆஜர்

மும்பை, பணப் பரிமாற்ற மோசடி வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள, மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, மும்பையில் உள்ள அமலாக்க துறை அலுவலகத்தில், நேற்று ஆஜரானார்.மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா, கூட்டணி ஆட்சி நடக்கிறது.

புகார்இம்மாநிலத்தை சேர்ந்த, 'ஐ.எல்., அண்ட் எப்.எஸ்.,' என்ற நிறுவனத்தின் முதலீட்டில், பணப் பரிமாற்ற மோசடி நடந்துள்ளதாக, புகார் எழுந்தது.இந்த வழக்கில், மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர், ராஜ் தாக்கரே மீது, அமலாக்கதுறை வழக்குப் பதிவு செய்தது.இவ்விவகாரம் தொடர்பாக, விசாரணைக்கு ஆஜராகும்படி, ராஜ் தாக்கரேவுக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டது. இதையடுத்து, தெற்கு மும்பையில் உள்ள, அமலாக்க துறை அலுவலகத்தில், ராஜ் தாக்கரே நேற்று ஆஜரானார்.அவருடன், அவரது மனைவி ஷர்மிளா, மகன் அமித் மற்றும் மருமகள் மித்தாலி ஆகியோர் உடன் வந்தனர். ராஜ் தாக்கரே விசாரணை அறைக்குள் சென்ற பிறகு, அவர்கள், அருகில் உள்ள ஓட்டலுக்கு சென்றனர்.

தான் விசாரணைக்கு ஆஜராகும் அன்று, 'மஹாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தொண்டர்கள், வன்முறையில் ஈடுபட கூடாது' என, ராஜ் தாக்கரே வேண்டுகோள் விடுத்து இருந்தார்.தடை உத்தரவுஆனாலும், அசம்பாவித சம்பவங்களை தடுக்க, அமலாக்க துறை அலுவலக வளாகம் மற்றும், ராஜ் தாக்கரே வீடு அமைந்துள்ள, மத்திய மும்பை, தாதர் பகுதியின் சில இடங்களில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டது.இந்த வழக்கில், சிவசேனா மூத்த தலைவரும், மஹாராஷ்டிர முன்னாள் முதல்வர், மனோகர் ஜோஷியின் மகனுமான, உன்மேஷ் ஜோஷியிடமும், அமலாக்க துறை அதிகாரிகள், விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X