ராகுலை எதிர்த்து போட்டியிட்ட துஷார்

Added : ஆக 22, 2019
Advertisement
 ராகுலை எதிர்த்து போட்டியிட்ட துஷார்

திருவனந்தபுரம், சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், காங்., முன்னாள் தலைவர் ராகுலை எதிர்த்து, கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிட்ட, துஷார் வெள்ளபள்ளி, 19.52 கோடி ரூபாய் செக் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுமானப் பணிகேரளாவில் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு அமைந்துள்ளது.சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், இங்குள்ள வயநாடு தொகுதியில், காங்., முன்னாள் தலைவர், ராகுல் போட்டியிட்டு வென்றார்.பா.ஜ., தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், பாரத் தர்ம ஜன சேனா தலைவர், துஷார் வெள்ளபள்ளி போட்டியிட்டார்.ஈழவா இன மக்களுக்காக இயங்கும் ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் அமைப்பின் துணைத் தலைவராகவும் அவர் உள்ளார்.துஷார், மேற்கு ஆசிய நாடான, யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சில், 19.52 கோடி ரூபாய் செக் மோசடி வழக்கில், சமீபத்தில் கைது செய்யப்பட்டார்.அங்குள்ள அஜ்மானில், கட்டுமான நிறுவனத்தை, அவர் நடத்தி வருகிறார். அங்கு நடைபெற்ற ஒரு கட்டுமானப் பணியில், நாசில் அப்துல்லா என்பவரின் நிறுவனத்துக்கு, துணை ஒப்பந்தம் வழங்கிஇருந்தார்.

அதற்காக, 2009ல், 19.52 கோடி ரூபாய் செக்கை, துஷார் கொடுத்திருந்தார். ஆனால் பணம் இல்லாததால், அந்த செக் திரும்பியது.அதையடுத்து, துஷார் மீது, கேரளாவின் திருச்சூரை பூர்வீகமாக கொண்ட நாசில், செக் மோசடி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் தான், துஷார் கைது செய்யப்பட்டுள்ளார்.
உடல்நிலை பாதிப்பு

இந்நிலையில், வெளியுறவு அமைச்சர், ஜெய்சங்கருக்கு, கேரள முதல்வர், பினராயி விஜயன், ஒரு கடிதம் எழுதி யுள்ளார். 'துஷாருக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.'காவலில் அவருடைய உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. அதனால், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X