பிரதமர் மோடி 3 நாடுகள் சுற்றுப் பயணம்

Updated : ஆக 24, 2019 | Added : ஆக 22, 2019 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி:பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் நாடுகளுக்கான பயணத்தை பிரதமர் மோடி துவக்கியுள்ளார். ஐரோப்பிய நாடான பிரான்ஸ் சென்றார்.ஐரோப்பிய நாடான பிரான்ஸ், மேற்கு ஆசிய நாடான, யு.ஏ.இ., எனப்படும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அதற்கு அருகில் உள்ள வளைகுடா நாடான பஹ்ரைன் ஆகியவற்றுக்கு, பிரதமர், நரேந்திர மோடி, அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.இரண்டு நாள் பயணமாக
 பிரதமர்,மோடி, 3 நாடுகள், சுற்றுப்பயணம்

புதுடில்லி:பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் நாடுகளுக்கான பயணத்தை பிரதமர் மோடி துவக்கியுள்ளார். ஐரோப்பிய நாடான பிரான்ஸ் சென்றார்.ஐரோப்பிய நாடான பிரான்ஸ், மேற்கு ஆசிய நாடான, யு.ஏ.இ., எனப்படும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் அதற்கு அருகில் உள்ள வளைகுடா நாடான பஹ்ரைன் ஆகியவற்றுக்கு, பிரதமர், நரேந்திர மோடி, அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

இரண்டு நாள் பயணமாக பிரான்சுக்கு சென்றுள்ள பிரதமர், அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். அதிபர் இமானுவேல் மேக்ரோன், பிரதமர் எட்வர்ட் பிலிப் உள்ளிட்டோரை சந்தித்து, இரு தரப்பு உறவுகள் குறித்து பேசுகிறார். மேலும், இந்திய சமூகத்தினர் இடையே உறையாற்றுகிறார்.

இன்று பிரான்சில் இருந்து, யு.ஏ.இ.,க்கு இரண்டு நாள் பயணமாக செல்கிறார். அபுதாபி பட்டத்து இளவரசர்,ஷேக் முகம்மது பின் ஜையது அலி நஹ்யானுடன் இரு தரப்பு உறவுகள் குறித்து, பிரதமர் மோடி பேச உள்ளார். மஹாத்மா காந்தியின், 150வது பிறந்தநாளையொட்டி, நினைவு தபால் தலையை, இருவரும் இணைந்து வெளியிட உள்ளனர். இதைத் தவிர, யு.ஏ.இ., அரசின் மிகவும் உயரிய விருதான, 'ஆர்டர் ஆப் ஜயீது', பிரதமருக்கு வழங்கப்பட உள்ளது.

வரும், 24 - 25ல் பஹ்ரைன் செல்கிறார், மோடி. பஹ்ரைனுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல், இந்திய பிரதமரான மோடி, அந்நாட்டின் பிரதமரான, இளவரசர் ஷேக் கலீபா பின் சல்மான் அல் காலிபாவை சந்திக்கிறார். பஹ்ரைன் மன்னர் ஷேக் ஹமீது பின் இலா அலி காலிபா உள்ளிட்டோரையும் சந்திக்க உள்ளார்.அதன்பிறகு, மீண்டும் பிரான்ஸ் செல்லும் அவர், 25 - 26ல் அங்கு நடக்கும், ஜி - 7 நாடுகள் மாநாட்டில், அதிபர் மேக்ரோனின் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

சுற்றுச்சூழல், பருவநிலை மாறுபாடு, டிஜிட்டல் முறைக்கு மாற்றம் ஆகியவை குறித்து, இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது.'இந்த பயணம், நம் நீண்ட கால நண்பர்களுடனான உறவை, மேலும் வலுப்படுத்தும். பல்வேறு துறைகளில் புதிய ஒத்துழைப்பை ஏற்படுத்தும்' என, தன் பயணத்துக்கு முன், சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ள செய்தியில், மோடி குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dummy Piece - Freeport,பகாமஸ்
23-ஆக-201923:39:35 IST Report Abuse
Dummy Piece அடேய் பக்கி... ஒரே நாட்டை எத்தனை தடவைதான் சுத்தி பாப்ப... இன்னும் உன்னைய நம்பிட்டு இருக்குற பக்தாள், இருக்கற வரைக்கும், உன் காட்டுல மழைதாண்டா... இதுக்கு நீ பேசாம டீயை வித்துட்டே இருந்திருக்கலாம்...
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
24-ஆக-201903:56:50 IST Report Abuse
 nicolethomsonபாகிஸ்தான் ஜந்துகள் அடுத்தவனை பார்த்து பக்கி என்று கூறுவது எதனால்?...
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
23-ஆக-201922:50:36 IST Report Abuse
Pugazh V அடிமைக் கூட்டம் வேறு வழியே இல்லாததால் டாடா காட்டண்டிருக்கு. அதுகள் பாஷையில் சொல்வதானால், "பாவாடை நாடுகளிடம் திருவோடு ஏந்தி, எங்கள் நாட்டு க்கு வாங்க.. வந்து தொழில் பண்ணுங்க.. எங்கள் ஆளுங்களுகாகு வாட்ச்மேனா வேல போட்டு குடுங்க என்று. கெஞ்ச போறாரா?.
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
24-ஆக-201903:56:00 IST Report Abuse
 nicolethomsonஅப்படி கெஞ்சுவது யார் என்று NGO லிஸ்ட் அவர்கள் ஈமெயில் பார்த்தால் தெரியும், உன்னோட பதிலில் தெரியும் ஸ்லாங் பார்த்தால் செக்யூலரிஸம் புல்லரிக்க வைக்கும் இதுதான் திமுகவின் செக்யூலரிஸம் அல்லவா , கலக்கு...
Rate this:
Cancel
ram -  ( Posted via: Dinamalar Android App )
23-ஆக-201922:11:44 IST Report Abuse
ram இஇக்கு ஒன்னுஞ் சொல்ரமாரியில்லபோாாாா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X