'மாஜி' முதல்வரின் இறுதி சடங்கில் வெடிக்காத போலீஸ் துப்பாக்கிகள்

Added : ஆக 22, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement

பாட்னா: பீஹார் முன்னாள் முதல்வர், ஜெகன்நாத் மிஸ்ராவின் இறுதி சடங்கில், அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்ட போது, 22 துப்பாக்கிகளும் வெடிக்காதது பரபரப்பை ஏற்படுத்தியது.பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதாதளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.

இம்மாநிலத்தின் முதல்வராக, மூன்று முறை பதவி வகித்தவர், ஜெகன்நாத் மிஸ்ரா. ஐக்கிய ஜனதா தளத்தின் மூத்த தலைவரான இவர், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, 19ம் தேதி இறந்தார்.சுபவுல் மாவட்டத்தில் உள்ள, மிஸ்ராவின் சொந்த கிராமமான பலுவா பஜாரில், அவரது இறுதிச்சடங்கு, நேற்று முன்தினம் நடந்தது. இதில், முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் சுஷில்குமார் மோடி, சுகாதார அமைச்சர் மங்கல் பாண்டே உட்பட, பலர் பங்கேற்றனர்.

தகன மேடையில், மிஸ்ராவின் உடல் வைக்கப்பட்டவுடன், அரசு மரியாதை செலுத்துவதற்காக, போலீசார், 22 துப்பாக்கிகளை வானத்தை நோக்கி சுட்டனர். ஆனால், ஒரு துப்பாக்கி கூட வெடிக்கவில்லை.துப்பாக்கிகள் வெடிக்காத நிலையில், மிஸ்ராவின் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த தகவல், சமூக வலைதளங்களில் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல்வர், துணை முதல்வர் முன்னிலையில் நடந்த இந்த சம்பவம் பற்றி, உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
23-ஆக-201918:21:54 IST Report Abuse
D.Ambujavalli அமரர் ஆனவரை இவ்விதம் விமர்ச்சித்தல் நன்றன்று. அஞ்சலி செலுத்தச் செல்லுமுன் துப்பாக்கிகள் வேலை செய்கின்றனவா என சரிபார்க்க வேண்டாமா? அன்னார் ஆத்மா சாந்தி யடைவதாக
Rate this:
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
23-ஆக-201916:58:30 IST Report Abuse
Cheran Perumal போலிஸாரிடமிருந்து நிஜ துப்பாக்கியை திருடி யாரேனும் பொம்மை துப்பாக்கிகளை வைத்துவிட்டனரா?
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
23-ஆக-201914:38:29 IST Report Abuse
madhavan rajan அவர் ஆத்மா சாந்தி அடைய அமைதி மிகவும் முக்கியம். துப்பாக்கி வெடித்தால் அமைதி கெட்டுவிடும். பிறகு எப்படி ஆத்மா சாந்தி அடையும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X