எக்ஸ்குளுசிவ் செய்தி

இந்தியா

'வீட்டுக்காவலில் உள்ளவர்களை விடுதலை செய்': தி.மு.க., தலைமையில், 14 கட்சிகள் ஆர்ப்பாட்டம்

Updated : ஆக 23, 2019 | Added : ஆக 22, 2019 | கருத்துகள் (20)
Share
Advertisement
 'வீட்டுக்காவலில் ,உள்ளவர்களை, விடுதலை செய்',: தி.மு.க., தலைமையில், 14 கட்சிகள், ஆர்ப்பாட்டம்

'காஷ்மீரில், வீட்டுக்காவலில் உள்ள அரசியல் தலைவர்களை, உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்' என, வலியுறுத்தி, தி.மு.க., தலைமையில், 14 கட்சிகளின் எம்.பி.,க்கள், டில்லியில், நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


சர்வாதிகாரப்போக்குபார்லிமென்ட் தி.மு.க., தலைவர், டி.ஆர்.பாலு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், காங்கிரஸ், திரிணமுல், இடது சாரிகள் உள்ளிட்ட, 14 கட்சிகளின் தலைவர்கள், இக்கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.,க்கள் மற்றும் தொண் டர்கள் பங்கேற்றனர்.'வீட்டுக்காவலில் உள்ள தலைவர்களை விடுதலை செய்; தொலைத்தொடர்பு துண்டிப்பை ரத்து செய்; ஜம்மு காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டு' என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.

இறுதியாக, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர், குலாம்நபி ஆசாத் பேசியதாவது:காஷ்மீரில், இயல்பு நிலைமை இல்லை என்பதை அனைவரும் ஒப்புக் கொள்ள வேண்டும். அதை உணரத் தவறினால், நாம் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்கிறோம் என, அர்த்தம். காஷ்மீரில், ஆளுங்கட்சியின் வட்டச் செயலாளர் கூட, அராஜகத்துடன் வலம் வந்து, 'டிஷ் டிவி' தொழில் செய்வோரை மிரட்டி, செய்திகளை கட்டுப்படுத்தும் சர்வாதிகாரப்போக்கு நிலவுகிறது.

அரசியலமைப்பு சட்டம் தந்த உரிமையை, மத்திய அரசு, புறவாசல் வழியாக, ஜம்மு -- காஷ்மீர் மக்களிடமிருந்து பறித்து உள்ளது.காஷ்மீர் விவகாரத்தில், மத்திய அரசு, எதையோ மறைக்கப்பார்க்கிறது. உண்மைகளை வெளியிடாமலிருக்க, ஊடகங்கள் தடுக்கப்படுகின்றன. எனவே, அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களையும், ஊடகங்களையும், காஷ்மீருக்கு, நேரில் அழைத்துச் செல்ல வேண்டும். அப்போது தான், அங்குள்ள நிலைமைகள் வெளியே தெரியவரும்.இவ்வாறு, குலாம்நபி ஆசாத் பேசினார்.


தீர்மானம்ஆர்ப்பாட்டத்தில், நிறைவேற்றப்படாத தீர்மானங்கள்: மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்காமல், அரசியல் சட்டத்தின், 370 வது பிரிவை ரத்து செய்தது கண்டிக்கத்தக்கது; மத்திய அரசின் இந்த நடவடிக்கை, அரசியல் சட்டத்திற்கு எதிரானது.

முன்னாள் முதல்வர்கள், முன்னாள், எம்.எல்.ஏ.,க் கள் உட்பட, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும், வீட்டுக்காவலில் இருந்து விடுதலை செய்ய வேண்டும்.காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை திரும்ப, நடவடிக்கை எடுக்க வேண்டும்; துண்டிக்கப்பட்ட தொலைத்தொடர்பு சேவையை, வழங்க வேண்டும்.இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.- நமது டில்லி நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
balakrishnan - Mangaf,குவைத்
24-ஆக-201914:33:25 IST Report Abuse
balakrishnan 14 கட்சிகள் சேர்த்து மொத்தமாக vanthavargal 37 பேர் .
Rate this:
Cancel
sankar - Nellai,இந்தியா
23-ஆக-201922:02:43 IST Report Abuse
sankar சபாஷ் - முந்நூற்று எழுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் இப்போது சிறைசென்ற தலைவர்களை விடுதலை செய் என்று மாறிவிட்டது - சட்டத்தை எரித்து விட்டு சட்டம் எழுதி உள்ள காகிதத்தை தான் எரித்தோம் என்று அன்று கருணா சொன்னது இப்போது நினைவுக்கு வருகிறது - மிகவும் பலமான "முதுகெலும்பு".
Rate this:
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23-ஆக-201921:04:50 IST Report Abuse
Sriram V Bunch of anti national . Kashmir politicians are eating and looting on Indian tax payers money. Dhirudargal munnetra kalagam invested money through these Kashmir politicians.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X