பொது செய்தி

இந்தியா

சிதம்பரத்திற்கு அடுத்து சிறைக்கு போவது யார்?

Updated : ஆக 22, 2019 | Added : ஆக 22, 2019 | கருத்துகள் (33)
Advertisement
P Chidambaram, INX Media, Akhilesh, Mayawati, CONGRESS, SHASHI THAROOR, REVANTH REDDY, KAMAL NATH'S NEPHEW RATUL PURI, AHMED PATEL, 
DK SHIVAKUMAR, BHUPINDER SINGH HOODA, VIRBHADRA SINGH, MAYAWATI's BROTHER, MAYAWATI, BSP,  MEMORIAL SCAM,  AKHILESH YADAV, SAMAJWADI PARTY, சிதம்பரம், மாயாவதி, அகிலேஷ்

புதுடில்லி: பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ், முன்னாள் முதல்வர்கள் வீர்பத்ர சிங், பூபிந்தர் சிங் ஹூடா உள்ளிட்டோர் மீது ஊழல் வழக்குகள் உள்ளதால், அடுத்து கைது நடவடிக்கை அவர்கள் மீது பாயுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஐ.என்.எக்ஸ் வழக்கில் சிதம்பரத்தை சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்து 5 நாள் காவலில் விசாரணை நடத்தி வருகின்றனர். சிதம்பரம் கைதுக்கு கண்டனம் தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள், இது அரசியல்பழிவாங்கும் நடவடிக்கை எனக்கூறியுள்ளனர். ஆனால், பா.ஜ.,இதனை மறுத்துள்ளது.

இந்நிலையில் சிதம்பரத்தை அடுத்துசி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறையின் விசாரணை வலையில் அகிலேஷ், மாயாவதி ,காங்., முன்னாள் முதல்வர் வீர் பத்ராசிங், மற்றும் அவரது மனைவி , பூபிந்தர்சிங் ஹூடா, கர்நாடகாவை சேர்ந்த சிவகுமார், அகமதுபடேல் , ஆகியோர் உள்ளனர்.


அகிலேஷ்யாதவ்
சட்டவிரோத சுரங்க முறைகேடு தொடர்பாக, 2019 ஜனவரி 17 ல் அமலாக்கத்துறை பிரிவினர் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த விவகாரத்தில், 2012 - 16 காலகட்டத்தில், சுரங்க முறைகேடு தொடர்பாக அகிலேஷ், அப்போது கனிம வளத்துறை அமைச்சர் பதவி வகித்தவரிடம் விசாரணை நடத்தும் வகையில், கடந்த ஜன., 2ம் அரசு அதிகாரிகள் உட்பட 11 பேர் மீது சிபிஐ அதிகாரிகள் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

வழக்கின் நிலை: விசாணையில்


மாயாவதிஉ.பி., முதல்வராக மாயாவதி இருந்த 2007 -12 காலகட்டத்தில், மாநிலத்தில் பகுஜன் சமாஜ் தலைவர் கன்ஷிராம் மற்றும் கட்சி சின்னத்தை பிரபலபடுத்தும் வகையில் சிலைகள் அமைக்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாகவும், இதனால் அரசுக்கு ரூ.111.44 கோடி இழப்பு ஏற்பட்டது என மாநில ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். இதன் அடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள், பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து கடந்த ஜன.,31ம் தேதி மாநிலத்தின் 7 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

வழக்கின் நிலை: விசாரைணையில்
Advertisement
சொத்து பறிமுதல்2019 ஜூலை மாதம் மாயாவதியின் சகோதரர் அனந்த் குமார், பெயரில் இருந்த ரூ.400 கோடி மதிப்புள்ள பினாமி சொத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கினர்.


வீர்பத்ர சிங்
இமாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் வீர்பத்ரசிங் அவரது மனைவி பிரதிபா உள்ளிட்டோர் மீது 2015 செப்., மாதம் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வீர் பத்ர சிங், மத்திய அமைச்சராக இருந்த போது, வருமானத்திற்கு மீறி சொத்து சேர்த்ததாக புகார் கூறப் பட்டது. இந்த வழக்கில், கடந்த பிப்., மாதம் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

வழக்கின் நிலை: கீழ் கோர்ட்டில் விசாரணையில்


பூபிந்தர்சிங் ஹூடா
சர்ச்சைக்குரிய நில ஒப்பந்தம் தொடர்பாக, அரியானாவின் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா சிபிஐ மற்றும் ஊழல் கண்காணிப்பு பிரிவினர் வழக்குப்பதிவு செய்தனர்.ஊழல் தடுப்பு சட்டம், கிரிமினல் சதி, மோசடி ஆகியவற்றின் கீழ் கூர்கானில் ஹூடாவுக்கு எதிராக பதியப்பட்ட வழக்கின் அடிப்படையில், பணமோசடிதடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில், கடந்த ஜூலை மாதம் ரூ.66.57 கோடி மதிப்புள்ள சொத்தை முடக்கினர்.

வழக்கின் நிலை; விசாரணையில்


சிவகுமார்(கர்நாடகா)
கடந்த 2018 செப்., மாதம் ஹவாலா பணப்பரிமாற்றம் மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பாக காங்கிரஸ் நிர்வாகியும், கர்நாடக மாநில முன்னாள் அமைச்சருமான டிகே சிவக்குமார் மீது அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் மீது பணமோசடிதடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறையினர், சிவக்குமாருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். 2017 ஆக, முதல் சிவக்குமார் வருமான வரித்துறையினரின் கண்காணிப்பில் உள்ளார். அவருக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கடந்த வாரமும், டில்லி மற்றும் கர்நாடகாவிலும் சோதனை நடந்தது. இதில் 10 கோடி பணம் சிக்கியது.


அகமது படேல்
விவிஐபிக்கள் பயணம் செய்ய ஹெலிகாப்டர் வாங்கியதில் முக்கிய குற்றவாளியான கிறிஸ்டியன் மைக்கேலுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அகமது படேல் பெயர் இடம்பெற்றுள்ளது.

வழக்கு நிலை: விசாரணையில்


கமல்நாத் மருமகன் ரதுல் பூரி
இவர் மீதும் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு உள்ளது. இவர், கடந்த சில நாட்களுக்கு முன்னர், வங்கி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். கடந்த 20 ம் தேதி 6 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு கோர்ட் அனுமதி வழங்கியது.


ரேவந்த் ரெட்டி (தெலுங்கானா)தெலுங்கானா மாநில காங்கிரஸ் நிர்வாகியான ரேவந்த் ரெட்டி, ஓட்டுக்கு பணம் கொடுத்த வழக்கில், கடந்த 19ம் தேதி அமலாக்கத்துறை முன்னர் ஆஜரானார். 2015 ல் தெலுங்கு தேசம் கட்சியில்இருந்த போது, தெலுங்கானா சட்ட மேலவைக்கு, நடந்த தேர்தலில், தனது கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக ஓட்டுப்போட லஞ்சம் கொடுக்க முயன்றது தெரியவந்தது. 2018 செப்.,ல் ரேவந்த் ரெட்டியிடம் வருமான வரித்துறையினர் பல மணி நேரம் விசாரணை நடத்தினர்.


சசிதரூர்
டில்லி ஓட்டலில் மர்மமான முறையில், இவரது மனைவி சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பாக கோர்ட் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என பா.ஜ., மூத்த எம்.பி., சுப்ரமணியன்சாமி கூறினார். ஜனவரி 2015 ல் அப்போதைய போலீஸ் கமிஷனர் பாஸி, சுனந்தா புஷ்கர் தற்கொலை செய்யவில்லை. கொலை செய்யப்பட்டதாக கூறினார். இந்த விவகாரத்தில், அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வழக்கு நிலை: விசாரணையில் உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
24-ஆக-201917:33:34 IST Report Abuse
Jayvee இன்னும் சில.. மீண்டும் ராஜா, கனிமொழி, மா சு ( மாநில குற்றம்) பீ நாய் விஜயன், அந்தோணி, மாறன், ஷீலா தீட்சித் வாரிசுகள், அசோக் சவுகான் ,
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
24-ஆக-201917:23:42 IST Report Abuse
Malick Raja இந்திய அரசியல் வரலாற்றிலேயே ஊழலில் முத்திரை பாதித்தது பிஜேபி அதிலும் தேசிய தலைவர் பங்காரு லட்சுமணன் கையும் களவுமாக டெஹல்கா மூலம் பிடிபட்டு தண்டனையும் அனுபவித்து மறைந்ததை நாடே கண்ட ஒன்று .. ஏன் உலகறிந்த ஒன்றே என்பது சரியாகும் .. அதையெல்லாம் மறைத்து இன்று ஆட்சிக்கு வந்துவிட்ட மமதையில் ஏதேதோ தோன்றிய வகையில் எல்லாம் ,,அதாவது குரங்கு கையில் பூமாலையாக நிகழ்வுகள் நடப்பது அழிவுக்கு அறிகுறியே என்பது சரியாகும் . தங்களுக்கு வர இருக்கிற இழிநிலை அழிவை தாங்களாகவே ஏற்படுத்திக்கொள்வதே மிகச்சரியாக இருக்கும் .. இந்திய தேச மக்கள் காணத்தான் போகிறார்கள் .. வாழ்க வளர்க வெல்க எமது இந்தியா வீழ்க .ஒழிக .அழிக .. அபரிமித சூழ்ச்சி வன்மங்கள் ...
Rate this:
Share this comment
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
27-ஆக-201913:15:49 IST Report Abuse
Yaro Oruvanஹா ஹா இப்படி தனியா புலம்ப வுட்டுட்டாங்களே.. சொக்கா சொக்கா.. சாரி..சாரி.. டென்க்ஷன்ல வாய்தவறி சொக்கான்னுட்டேன்.. இன்சல்லாஹ் இன்னும் பத்து பதினைஞ்சி வருஷம் கழிச்சாவது பொலம்பல் நிக்க ஏதாவது வழி பொறக்குமான்னு பாப்போம்.. அடுத்த பத்து பதினஞ்சு வருஷத்துக்கு இன்சல்லாஹ் எந்த பால் போட்டாலும் நோ பால்தான்...
Rate this:
Share this comment
Cancel
23-ஆக-201913:10:36 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் அடுத்து சிவகுமார் மற்றும் வாத்ரா தான் .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X