அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஜெயகுமார் ஒரு, 'ஜோக்கர்' : ஸ்டாலின்

Added : ஆக 22, 2019 | கருத்துகள் (17)
Share
Advertisement
 ஜெயகுமார் ஒரு, 'ஜோக்கர்' : ஸ்டாலின்

சென்னை, ''உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்பதற்காக, தி.மு.க., வழக்கு தொடரவில்லை; 'முறையாக நடத்த வேண்டும்' என்பதற்காகத் தான், வழக்கு தொடரப்பட்டது,'' என, அக்கட்சித் தலைவர், ஸ்டாலின் கூறினார்.அவரது பேட்டி:டில்லியில், தி.மு.க., நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம், வெற்றிகரமாக அமைந்துள்ளது. ஜம்மு - காஷ்மீரில், தொலை தொடர்பு வசதிகளும் துண்டிக்கப்பட்டுள்ளன.
அங்கு, மக்கள் நிம்மதியான வாழ்க்கை வாழக்கூடிய வகையில், ஒரு சுமுகமான சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என, இந்த கண்டன ஆர்ப்பாட்டம் வாயிலாக வலியுறுத்தப்பட்டுள்ளது.தி.மு.க., அழைப்பை ஏற்று, அதில் பங்கேற்ற கட்சித் தலைவர்கள், எம்.பி.,க்களுக்கு நன்றி. சி.பி.ஐ., அதிகாரிகள், சுவர் ஏறிக் குதித்து, முன்னாள் அமைச்சர், சிதம்பரத்தை கைது செய்தது, நாட்டிற்கு அவமானமாகக் கருதுகிறேன்; அது, கண்டிக்கத்தக்கது.'சிதம்பரம் கைது, காங்கிரசுக்கும், தி.மு.க.,வுக்கும் ஏற்பட்ட தலைகுனிவு' என, அமைச்சர், ஜெயகுமார் சொல்லியிருக்கிறார்; அவர் ஒரு, 'ஜோக்கர்' என்பதால், அதற்கு பதில் சொல்ல விரும்பவில்லை.இவ்வாறு, ஸ்டாலின் கூறினார்.

எம்.பி.,க்கள் கூட்டம் தள்ளிவைப்பு

தி.மு.க., தலைவர், ஸ்டாலின் தலைமையில், நாளை நடக்க இருந்த, எம்.பி.,க்கள் கூட்டம், 29ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. வரும், 29 காலை, 10:00 மணிக்கு, சென்னை, அறிவாலயத்தில், இக்கூட்டம் நடைபெற உள்ளது.அதே போன்று, வேலுார் லோக்சபா தொகுதியில், தி.மு.க., வேட்பாளர், கதிர் ஆனந்தை வெற்றி பெறச் செய்த, வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம், வாணியம்பாடியில், 25ல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.இது, தொடர் மழையின் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
23-ஆக-201920:24:03 IST Report Abuse
Vijay D Ratnam சரி சரி அடிச்சிக்காதீங்கப்பா, அவரு ஜோக்கர், இவரு தற்குறி என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்தான்.
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
23-ஆக-201916:36:32 IST Report Abuse
madhavan rajan முறையாக நடத்த வேண்டும் என்று நீங்கள் வழக்கு தொடர்ந்தது உண்மையானால், இப்போது முறையாக நடக்கும் என்ற முடிவுக்கு நீங்கள் வரக் காரணம் என்ன? உங்களுக்கு எப்போது முறையாக நடக்கும் என்று தெரிகிறதோ அப்போது நடத்த வேண்டுமா? நீங்கள் ஆளும் கட்சியாக இருந்தபோது எப்போது எதிர்க்கட்சி முறையாக தேர்தல் நடக்கும் என்று நம்புகிறதோ அப்போதுதான் நத்தத்துவந்தீர்களா? உங்களுக்கு ஒரு நியாயம் பிறருக்கு ஒரு நியாயம் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டீர்கள் என்று நினைக்கிறேன்
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
23-ஆக-201916:13:26 IST Report Abuse
Endrum Indian பாம்பின் கால் பாம்பறியும்???என்ன சுடலை சரிதானே???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X