அரசியல் செய்தி

தமிழ்நாடு

வெளிநாடு பயணம் முதல்வர் ஆலோசனை

Updated : ஆக 23, 2019 | Added : ஆக 22, 2019 | கருத்துகள் (4)
Share
Advertisement
 வெளிநாடு, பயணம், முதல்வர்,ஆலோசனை

முதல்வர், இ.பி.எஸ்., வெளிநாடு செல்வதற்கான ஆயத்தப் பணிகள் துவங்கி உள்ளன. இது தொடர்பாக, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன், முதல்வர், இ.பி.எஸ்., நேற்று ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில், தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தவும், தொழில் முதலீடுகளை ஈர்க்கவும், 'யாதும் ஊரே' என்ற திட்டத்தை, தமிழக அரசு அறிவித்து உள்ளது.இதன் வழியே, உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள், தமிழ் சங்கங்கள், தொழில் அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்தி, தமிழகத்தில் முதலீடு செய்வது தொடர்பாக, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.

அதன் ஒரு பகுதியாக, வெளிநாடு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு, முதல்வர், இ.பி.எஸ்., செல்ல உள்ளார். வரும், 28ல், அவர் வெளிநாடு புறப்படுகிறார்; செப்., 9ல், சென்னை திரும்புகிறார். அவருடன், தொழில் துறை அமைச்சர், எம்.சி.சம்பத் உட்பட பல்வேறு துறை அமைச்சர்கள் செல்ல உள்ளனர்.

இந்நிலையில் நேற்று, சென்னை, தலைமைச் செயலகத்தில், முதல்வர், இ.பி.எஸ்., தலைமையில், ஆலோசனைக் கூட்டம் நடந்தது.துணை முதல்வர், பன்னீர்செல்வம், அமைச்சர்கள், செங்கோட்டையன், தங்கமணி, எம்.சி.சம்பத், காமராஜ், தலைமைச் செயலர், சண்முகம், அமெரிக்க துாதரக அதிகாரிகள் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில், அமெரிக்காவில் செல்ல வேண்டிய இடங்கள், சந்திக்க வேண்டிய முதலீட்டாளர்கள் போன்ற விபரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது.

அமைச்சர் ராஜு இன்றுமொரீஷியஸ் செல்கிறார்

மொரீஷியஸ் நாட்டின் ஜனாதிபதி, பரமசிவம் பிள்ளை இல்ல திருமண விழாவில் பங்கேற்க, தமிழக செய்தித் துறை அமைச்சர், ராஜுவிற்கு, அழைப்பு வந்துள்ளது. இவ்விழாவில் பங்கேற்க, அமைச்சர், ராஜு, இன்று, மொரீஷியஸ் செல்கிறார். அங்கு, 26ம் தேதி வரை, அமைச்சர், ராஜு பயணம் மேற்கொள்கிறார்.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-ஆக-201914:38:57 IST Report Abuse
ஆப்பு அங்கே போய் மது, சாராயக்கடைகள் எப்பிடி இயங்குதுன்னு பாத்துட்டு வந்து இங்கேயும் நல்ல சரக்கு கிடைக்க வழி செய்யுங்க.
Rate this:
Cancel
Ashanmugam - kuppamma,இந்தியா
23-ஆக-201911:27:52 IST Report Abuse
Ashanmugam தமிழக முதல்வர் இந்த வாய்ப்பை நழுவ விட்டால் மீண்டும் வெளிநாட்டு பயணம் அதிகார தோரணையில் கிடைக்காது. மேலும், ஆட்சி ஆட்டம் கண்டு நித்திய கண்டம் பூரண ஆயுசு போல ஓடிக்கொண்டு இருக்கிறது. ஆகவே, இதான் இவர் வாழ்வில் காணும் கடைசி உலகம் சுற்றும் பயணம்.
Rate this:
Cancel
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
23-ஆக-201907:29:06 IST Report Abuse
Matt P velinaatu varumpothu coat suit yellaam aniya thevaiyilalai ...arabu naattu aafrica naattu pirabalankal yellaam paarambariya utai aninthu thaan varukiraarkal .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X