சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.47 லட்சம் மோசடியா? புலம்பும் சினிமா இயக்குனர்

Added : ஆக 22, 2019
Share
Advertisement

சென்னை, 'போலி பத்திரங்களை வைத்து, என் மீது, வீண் பழி சுமத்திஉள்ளனர்' என, இயக்குனர், வடிவுடையான் கூறியுள்ளார்.நடிகர், விஷாலை வைத்து படம் இயக்குவதாக கூறி, 47 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக, இயக்குனர், வடிவுடையான் மீது, சினிமா தயாரிப்பாளர், சுரேஷ் கோத்தாரி புகார் கொடுத்துள்ளார்.இந்நிலையில், தன் மீதான புகார் குறித்து, வடிவுடையான்கூறியதாவது:என் மீதான புகார், முற்றிலும் தவறானது. சுரேஷ் கோத்தாரி யார் என்றே எனக்கு தெரியாது. அவருக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.அசோக் லோதா என்பவரிடம், 2018ல், 3 லட்சம் ரூபாய் கடன் பெற்று, அதை வட்டியும், முதலுமாக திருப்பி கொடுத்து விட்டேன்.
நான் பெற்ற கடனுக்காக, அவரிடம், வெற்று காசோலை, கையெழுத்திட்ட பத்திரம் உள்ளிட்டவற்றை வழங்கினேன். நான் கடனை திரும்ப கொடுத்தும், அந்த பத்திரம், காசோலையை, அவர் திருப்பித் தரவில்லை. இது குறித்து, அவர் மீது, நான் தொடர்ந்த வழக்கு, நிலுவையில் உள்ளது.என் மீதுள்ள கோபத்தில், அசோக் லோதா, என் காசோலை உள்ளிட்டவற்றை, சுரேஷ் கோத்தாரியிடம் கொடுத்து, இந்த புகாரை எழுப்பிஉள்ளார். என் மீது, பொய் புகார் கொடுத்தோர் மீது, சட்டரீதியாக நடவடிக்கை எடுப்பேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X