சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'டிவி' நிறுவனம் பொய் புகார் நடிகை மதுமிதா அலறல்

Added : ஆக 22, 2019
Advertisement
 'டிவி' நிறுவனம் பொய் புகார் நடிகை மதுமிதா அலறல்

சென்னை, ''தனியார், 'டிவி' நிறுவனம், என் மீது பொய் புகார் அளித்துள்ளது,'' என, நடிகை, மதுமிதா கூறினார்.ஒரு கல் ஒரு கண்ணாடி, ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடித்தவர், மதுமிதா. இவர், தனியார், 'டிவி' ஒன்றில் ஒளிபரப்பாகி வரும், 'பிக்பாஸ் - 3' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார்.தற்கொலை முயற்சிமதுமிதா, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதால், சில தினங்களுக்கு முன், அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார்.இதையடுத்து, சம்பந்தப்பட்ட, 'டிவி' நிறுவனத்திடம், 'பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க, ஒப்பந்தம் செய்தபடி, முழு தொகையும் தர வேண்டும்.
'மறுத்தால், தற்கொலை செய்து கொள்வேன்' என, மதுமிதா மிரட்டல் விடுத்ததாக கூறப்பட்டது.இது குறித்து, 'டிவி' நிறுவனம், சென்னை, கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது.அதில், 'மதுமிதாவுக்கு, 11.50 லட்சம் ரூபாய் தரப்பட்டுள்ளது. 'மீதி தொகையை, பின்னர் தருகிறோம்' என, கூறினோம். அதற்கு, சம்மதம் தெரிவித்துச் சென்றார். தற்போது, 'மீதி தொகையையும் தர வேண்டும்' என, மிரட்டுகிறார்' என, கூறப்பட்டுள்ளது.இதற்கு விளக்கம் அளித்து, மதுமிதா, நேற்று அளித்த பேட்டி:நான், 10 ஆண்டுகளாக, சினிமாவில் நடித்து வருகிறேன். பிக்பாஸ் - 3 நிகழ்ச்சியை நடத்தி வரும், 'டிவி' நிறுவனம், என் மீது பொய் புகார் அளித்து உள்ளது. இதனால், என் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்டுஉள்ளது.மீதி தொகை, எனக்கு தருவதாக, வாக்குறுதி அளித்துள்ளனர்.

ஆனால், திடீரென எதற்காக, என் மீது இப்படியொரு புகாரை, காவல் நிலையத்தில் அளித்தனர் என, தெரியவில்லை.தீர்வுஇதுபற்றி, அந்த நிறுவனத்திடம் விளக்கம் கேட்க முயன்றேன்; பதில் இல்லை. இப்பிரச்னை தொடர்பாக, பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும், நடிகர், கமலும், 'டிவி' நிறுவனமும் பேசி, சுமூகமாக தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, மதுமிதா கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X