செப்., 3ல் டில்லியில் அமைச்சர்கள் கூட்டம் 'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' திட்டம்

Added : ஆக 22, 2019 | கருத்துகள் (1)
Advertisement

'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' திட்டம் தொடர்பாக ஆலோசிக்க, மத்திய உணவு துறை சார்பில், டில்லியில், செப்., 3ல், மாநில உணவு துறை அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் நடத்தப்படுகிறது.தமிழக ரேஷன் கடைகளில், இரண்டு கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு, அரிசி, கோதுமை இலவசமாகவும்; சர்க்கரை, பாமாயில் உள்ளிட்டவை, குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன.மேலும், மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப, ரேஷன் கார்டு வழங்கப்படுவதால், வசதியானவர்களும், அனைத்து பொருட்களும் வாங்குகின்றனர்.
மற்ற மாநிலங்களில், ஏழைகளுக்கு மட்டுமே, ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன.இந்நிலையில், மத்திய அரசு, எங்கு வேண்டுமானாலும், ரேஷன் பொருட்களை வாங்க, 'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.இத்திட்டத்திற்கு, தமிழக எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இந்நிலையில், மத்திய நுகர்வோர் விவகாரம் மற்றும் உணவு துறை சார்பில், டில்லியில், செப்., 3ல், அனைத்து மாநில உணவு துறை அமைச்சர்கள் பங்கேற்கும் கூட்டம் நடத்தப்படுகிறது.அதில், 'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' திட்டம் அமல்படுத்துவது உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்கப்பட உள்ளன.

இது குறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில், ரேஷன் பொருட்களுக்காக, ஆண்டுக்கு, 6,000 கோடி ரூபாய் செலவு செய்யப்படுகிறது.'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை அறிமுகம் செய்தால், வெளிமாநிலத்தவரும் பயன் பெற வாய்ப்புதால், அரசுக்கு, கூடுதல் செலவு ஏற்படும்.எனவே, அத்திட்டத்தை, தமிழகத்தில், தற்போதைக்கு செயல்படுத்த வாய்ப்பில்லை. இது தொடர்பான அனைத்து விபரங்களும், உணவு துறை அமைச்சர்கள் மாநாட்டில் தெரிவிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramachandran Rajagopal - Sundivakkam,இந்தியா
23-ஆக-201908:42:23 IST Report Abuse
Ramachandran Rajagopal இருபது சதவிகிதம் வரை மாதாந்திர தேவையில் குறைத்து ரேஷன் கடைகளுக்கு சப்ளை செய்து ஏழைகளுக்கு வழங்கமுடியாமல் செய்து பணக்காரர்களுக்கும் மாத சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கும் தவறாமல் மாதந்தோறும் வழங்கச் செய்வதால் அரசுக்கு ஏற்படும் இழப்பை ஈடு செய்துவரும் அரசின் தந்திரப் போக்கினை எந்த அரசியல் கட்சியினரும் கண்டுகொள்ளவில்லை அவர்கள் ஒட்டு விழாது என்பதற்காக.இந்திய அளவில் ஒரே ரேஷன் அட்டை என்பதை அமல்படுத்தினாலாவது தகுதியற்றவர்களுக்கு எல்லாம் இலவசமாக அரிசி வழங்குவதை நிறுத்துவார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது.அந்தந்த மாநிலவத்தைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கும் செலவை அந்தந்த மாநிலங்கள் ஏற்கச் செய்தால் ஏன் அமல்படுத்த முடியாது. எப்படியாவது தப்பித்துக் கொண்டு ஏழைகளை மோசடி செய்யலாம் என்பதே தமிழக அரசாங்கத்தின் கொள்கை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X