சிதம்பரத்தை சிக்க வைத்த இந்திராணி வாக்குமூலம்

Updated : ஆக 23, 2019 | Added : ஆக 22, 2019 | கருத்துகள் (15+ 140)
Advertisement
 சிதம்பரத்தை,சிக்க வைத்த,இந்திராணி,வாக்குமூலம்

புதுடில்லி,:மும்பையைச் சேர்ந்த, ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனத்தின் உரிமையாளர்களான, பீட்டர் முகர்ஜி, அவருடைய மனைவி இந்திராணி முகர்ஜி அளித்த வாக்குமூலமே, இந்த வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர், சிதம்பரம் மற்றும் அவருடைய மகன் கார்த்தி, சிக்கியதற்கு, காரணம்.ஐ.என்.எக்ஸ்., மீடியா நிறுவனம், 2007ல், அன்னிய முதலீடு பெறுவதற்கு அனுமதி கோரியிருந்தது.


அனுமதி



அப்போது, 4.62 கோடி ரூபாய் அளவுக்கு அன்னிய முதலீடு பெறுவதற்கு, மத்திய நிதி அமைச்சகத்தின் கீழுள்ள, எப்.ஐ.பி.பி., எனப்படும், அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி அளித்தது. ஆனால், ஐ.என்.எக்ஸ்., நிறுவனம், 305.36 கோடி ரூபாய் முதலீட்டை பெற்றது; துணை நிறுவனமான, ஐ.என்.எக்ஸ்., நியூஸ் நிறுவனத்தில், 26 சதவீதம் முதலீடு, அனுமதி பெறாமல் செய்யப்பட்டது.

இதற்காக, அப்போது மத்திய நிதி அமைச்சராக இருந்த, காங்., மூத்த தலைவர், சிதம்பரத்தை, அந்த நிறுவனத்தின் உரிமையாளர்களான, பீட்டர் முகர்ஜி மற்றும் அவருடைய மனைவி, இந்திராணி முகர்ஜி, டில்லியில் அவருடைய அலுவலகத்தில் சந்தித்தனர். பின், இது பிரச்னையாகி, விசாரணை நடந்தது.தன்னுடைய மகள், ஷீனா போரா கொலை வழக்கில், இந்திராணி முகர்ஜியும், அவருடைய மூன்றாவது கணவரான, பீட்டர் முகர்ஜியும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கடந்தாண்டு, பிப்., 17ல், ஐ.என்.எக்ஸ்., மீடியா தொடர்பான மோசடி குறித்து, இந்திராணி முகர்ஜி வாக்குமூலம் அளித்தார்.


சந்திப்பு



வாக்குமூலத்தில் அவர் கூறியுள்ளதாவது:எங்களுடைய நிறுவனத்திற்கு அன்னிய முதலீடு பெறுவது தொடர்பான பிரச்னை குறித்து, சிதம்பரத்தை அவருடைய அலுவலகத்தில் சந்தித்தோம். அப்போது, தன்னுடைய மகன் கார்த்தியை சந்திக்கும்படியும், அவருடைய தொழிலுக்கு உதவும்படியும் சிதம்பரம் கூறினார்.

அதைத் தொடர்ந்து, டில்லியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஓட்டலில், கார்த்தியை சந்தித்தோம். அப்போது, 7 கோடி ரூபாய் பணம் கொடுத்தால், பிரச்னையை தீர்த்து வைப்பதாக, கார்த்தி கூறினார்.இதற்காக, கார்த்திக்கு சொந்தமான, 'செஸ் மேனேஜ்மென்ட் மற்றும் அட்வான்டேஜ் ஸ்ட்ரேடஜிக்' என்ற இரண்டு நிறுவனங்களை, ஆலோசகர்களாக நியமிக்க வேண்டும் என்று கூறினார்.

அந்த நிறுவனங்கள் மூலம், ஆலோசனைகள் வழங்கியதாக கணக்கு எழுதி, பணத்தை மாற்றும்படி கூறினார். ஆனால், எவ்வளவு பணம் மாறியது, எப்போது மாறியது என்பது, பீட்டர் முகர்ஜிக்கு தான் தெரியும்.இவ்வாறு, அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.


7 கோடி



இந்நிலையில், பீட்டர் முகர்ஜியும் இந்த வழக்கில், வாக்குமூலம் அளித்தார். அவர் கூறியதாவது: சிதம்பரத்தை இரண்டு அல்லது மூன்று முறை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். என்னுடைய பிரச்னைகளுக்கு தீர்வு காணும்படி கூறினேன். அப்போது, தன்னுடைய மகன் தொழிலுக்கு உதவும் படி அவர் கூறினார்.அன்னிய முதலீடு பெறுவதில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். கார்த்தி, 7 கோடி ரூபாய் கேட்டார்.


தவணை



அதில், முதல் தவணையாக அவருடைய நிறுவனத்துக்கு, ரூ.10 லட்சம் அனுப்பினேன்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.இந்த வழக்கில் விசாரணை நடத்திய அமலாக்கத் துறை, வேறு சில பண பரிமாற்றங்கள் நடந்ததற்கான ஆதாரங்களையும் திரட்டியுள்ளது. அதன்படி, கார்த்தியின், 'அட்வான்டேஜ் ஸ்ட்ரேடஜிக்' நிறுவனம், 3.50 கோடி ரூபாய்க்கான, 'பில்' கொடுத்துள்ளது. அந்தப் பணத்தை, ஐ.என்.எக்ஸ்., நிறுவனம் செலுத்தியுள்ளதாக, அமலாக்கத் துறை கூறுகிறது.


'பார்த்ததே இல்லை'



சிதம்பரம் கைது செய்யப்பட்டது குறித்து, அவருடைய மகன் கார்த்தி, நேற்று கூறியதாவது: என்னுடைய தந்தையை கைது செய்துள்ளது, அவருக்கு எதிரான நடவடிக்கை அல்ல; காங்கிரசை மிரட்டுவதற்காக நடந்தது தான். சி.பி.ஐ., முன் ஆஜராக வேண்டிய அவசியம் என்னுடைய தந்தைக்கு இல்லை. பலமுறை முயன்றும், இதில், எங்களுக்கு எதிராக எந்த வழக்கையும், சி.பி.ஐ.,யால் பதிவு செய்ய முடியவில்லை.மத்திய அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வருவதால் தான், அவரைக் கைது செய்துள்ளனர்.

விசாரணைக்கு ஆஜராகும்படி, எனக்கு, 20 முறை சம்மன் அனுப்பினர். ஒவ்வொரு முறையும், பல மணி நேரம் விசாரித்தனர். நான்கு முறை, என்னுடைய வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தினர்.பீட்டர் முகர்ஜியையோ, இந்திராணி முகர்ஜியையோ நான் சந்தித்ததே கிடையாது. அவர்கள் யார் என்பதே எனக்கு தெரியாது. மும்பையில் உள்ள பைகுலா சிறையில், அவருடன் சேர்த்து விசாரித்தபோது தான், இந்திராணியை முதல் முறையாக பார்த்தேன். நான், எப்.ஐ.பி.பி., யின் நடவடிக்கைகளில் தலையிட்டதும் கிடையாது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (15+ 140)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
narayanan iyer - chennai,இந்தியா
28-ஆக-201914:11:51 IST Report Abuse
narayanan iyer இந்திரமுகர்ஜி: கணவர்களை மாற்றும் பெண், தனக்கு பிறந்த பெண்ணையே கொலை செய்தவர், தனது கடைசி கணவனை விவாகரத்து செய்துவிட்டதாக அறிவித்த பின்னர்தான் இவர் அப்ரூவராக ஆகியிருக்கிறார். இப்படி நடந்தால் நீ வெளியில் வந்துவிடலாம், மீண்டும் கல்யாணம் செய்துகொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. கார்த்திக் பணம் கேட்டார் முகர்ஜி எவ்வளவு கொடுத்தார் தெரியாது. இது எப்படிபட்ட அறிக்கை?/இதன் மேல் நடவடிக்கை எடுக்கிறதாம் சிபிஐ. வேடிக்கை வினோதம் இந்த பிஜேபி ஆட்சியில் . மக்களின் பிரச்சனைகளை களைய வேண்டிய நடவடிக்கைகளை செய்வதை விடுத்து நேரத்தை வீணடித்துக்கொண்டு மக்களை திசைதிருப்பி ஆண்டுகொண்டு இருக்கிறார்கள் . நம் தலை எழுத்து
Rate this:
Share this comment
Cancel
oce - kadappa,இந்தியா
26-ஆக-201923:12:05 IST Report Abuse
oce இந்திராணி வாழ்க.
Rate this:
Share this comment
Cancel
Krish Sami - Trivandrum,இந்தியா
23-ஆக-201912:25:58 IST Report Abuse
Krish Sami சிதம்பரம் நிலைமைக்கு, ஒரு வகையில் கனிமொழி உவகை கொள்ளக்கூடும். அவர் சிறையில் இருக்கும் பொழுது மந்திரியாக வலம் வந்தவரல்லவா, இந்த சிதம்பரம்?
Rate this:
Share this comment
Selva - CHENNAI,இந்தியா
23-ஆக-201921:25:26 IST Report Abuse
Selva இடண்டுமே ஒரே கட்டையில் ஊறிய மட்டைகள்...தமிழகத்து அவமானம் ( ஐந்து அரசியல்கேடுகள் -ராஜா,கனிமொழி, ஜே, ஜே, சிதம்பரம்,தயாநிதி )...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X