நிலம் ஒதுக்கீடு ஊழல்: 'மாஜி' முதல்வர் ஆஜர்

Added : ஆக 22, 2019
Advertisement

பஞ்ச்குலா, ஏ.ஜெ.எல்., எனப்படும், 'அசோசியேடட் ஜர்னல்ஸ்' நிறுவனத்துக்கு, அரசு நிலம் ஒதுக்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக, ஹரியானா முன்னாள் முதல்வர், பூபிந்தர் சிங் ஹூடா, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், நேற்று ஆஜரானார்.ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கே, 2004 - 14ம் ஆண்டு வரை, பூபிந்தர் சிங் ஹூடா தலைமையில், காங்கிரஸ் ஆட்சி நடந்தது.

காங்கிரஸ் ஆதரவு பெற்ற, ஏ.ஜெ.எல்., நிறுவனம், 'டெக்கான் ஹெரால்டு' என்ற நாளிதழை நடத்தி வந்தது. ஒதுக்கீடுஇந்த நிறுவனத்துக்கு, ஹரியானா மாநிலம், பஞ்ச்குலா பகுதியில், 3,360 சதுர மீட்டர் நிலம், 1982ல், ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால்,1999 வரை, அங்கு எந்த கட்டுமானமும் நடைபெறவில்லை. இதனால், இந்த நிலத்தை, ஹரியானா நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் திரும்பப் பெற்றது.பிறகு, 2005ம் ஆண்டில், ஹரியானா நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம், அந்த நிலத்தை, ஏ.ஜெ.எல்., நிறுவனத்திடம் மீண்டும் ஒப்படைத்தது. அப்போது, ஆணையத்தின் தலைவராக, பூபிந்தர் சிங் ஹூடா இருந்தார்.இதில், முறைகேடுகள் நடந்ததாக கூறப்பட்டது. மேலும், 64.93 கோடி ரூபாய் மதிப்புடைய நிலத்தை, வெறும், 59 லட்சம் ரூபாய்க்கு, ஏ.ஜெ.எல்.,லுக்கு வழங்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.ஆட்சி மாற்றம்ஹரியானாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், இது பற்றி சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.இந்த வழக்கு தொடர்பாக, கடந்த ஆண்டு டிசம்பரில், பஞ்ச்குலாவில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், சி.பி.ஐ., சார்பில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இதில், பூபிந்தர் சிங் ஹூடா, காங்., மூத்த தலைவர், மோதிலால் வோரா உள்ளிட்டோர் மீதும், ஏ.ஜெ.எல்., நிறுவனத்தின் மீதும், குற்றம்சாட்டப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், பூபிந்தர் சிங் ஹூடா நேற்று ஆஜரானஜார். அவரிடம், நீதிபதி விசாரணை நடத்தினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X