பொது செய்தி

இந்தியா

'நேதாஜியின் அஸ்தியை மரபணு சோதனையிட வேண்டும்'

Added : ஆக 22, 2019
Advertisement

கோல்கட்டா, 'நேதாஜியின் அஸ்தியை, மரபணு சோதனை நடத்தி, அது, அவரது அஸ்திதானா என உறுதிப்படுத்த வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, நேதாஜியின் மகள் கோரிக்கை விடுத்துள்ளார்.நேதாஜி சுபாஸ் சந்திரபோசின் மகள், அனிதா போஸ், ஐரோப்பிய நாடான, ஜெர்மனியில் வசிக்கிறார்.மர்மம்இந்நிலையில், பி,டி.ஐ., செய்தி நிறுவனத்துக்கு, அனிதா போஸ் அளித்த பேட்டி:என் தந்தை மறைந்து, 74 ஆண்டுகள் முடிந்து விட்டன.

ஆனால், அவரது இறப்பில் உள்ள மர்மம் இன்னும் விலகவில்லை. என் தந்தையின் இறப்புக்கு, விமான விபத்து காரணமாக இருக்கலாம் என, நம்புகிறேன்.ஜப்பான் தலைநகர், டோக்கியோவிலுள்ள ரெங்கோஜி புத்தர் கோவிலில், அவரது அஸ்தி வைக்கப்பட்டுள்ளது. அஸ்தியிலுள்ள எலும்புகள், இன்னும் சேதமடையாத நிலையில் தான் இருக்கின்றன.எனவே, அதை மரபணு சோதனைக்கு உட்படுத்தி, அங்கிருப்பது, என் தந்தையின் அஸ்தி தானா என்பதை உறுதிப்படுத்தவேண்டும்.மகிழ்ச்சிநேதாஜியின் மரணத்தில் உள்ள மர்மத்தை போக்குவதில், பிரதமர் மோடி அதிக ஆர்வம் காட்டி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.

இதற்கு முன் இருந்த அரசுகள், இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டவில்லை என்பது உண்மை.கடிதம்அதனால், நேதாஜியின் அஸ்தியை, மரபணு சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என, பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளேன். இது தொடர்பாக, அவருக்கு கடிதம் எழுத உள்ளேன். அவரை நேரில் சந்தித்தும் வலியுறுத்துவேன்.இவ்வாறு, அனிதா போஸ் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X