பொது செய்தி

இந்தியா

செப்.20 -ல் முதல், 'ரபேல்' போர் விமானம் ஒப்படைப்பு

Updated : ஆக 24, 2019 | Added : ஆக 22, 2019 | கருத்துகள் (7)
Share
Advertisement
 செப்.20 -ல் ,முதல், 'ரபேல்' போர், விமானம், ஒப்படைப்பு

புதுடில்லி:விமானப்படைக்காக, ஐரோப்பிய நாடான பிரான்சிடமிருந்து, 'ரபேல்' போர் விமானங்கள் வாங்க, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் முதல் விமானம், அடுத்த மாதம், 20ம் தேதி, இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுகிறது. விமானத்தை பெறுவதற்காக, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படை தலைமை தளபதி, பி.எஸ்.தனோவா இருவரும், அடுத்த மாதம் பிரான்ஸ் செல்கின்றனர்.

நம் விமானப்படையில், 'மிக் - 21' ரக போர் விமானங்கள் தான் உள்ளன. விமான படையை வலிமை படுத்தும் நோக்கில், பிரான்சில், ராணுவ தளவாடங்களை தயாரிக்கும், 'டசால்ட் ஏவியேஷன்' நிறுவனத்திடமிருந்து, அதி நவீன, ரபேல் போர் விமானங்கள் வாங்க, மத்திய அரசு முடிவு செய்தது.இதையடுத்து, 62 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில், டசால்ட் நிறுவனத்திடமிருந்து, 36 போர் விமானங்கள் வாங்க, 2016ல், மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது. இந்த ஒப்பந்தத்தின்படி, முதல் ரபேல் போர் விமானம், இந்தியாவிடம், அடுத்த மாதம் ஒப்படைக்கப்பட உள்ளது.


அதிகாரிகள்



பிரான்சின் போர்டியக்ஸ் நகரில், ரபேல் விமானம் தயாரிக்கப்படும் தொழிற்சாலையில், அடுத்த மாதம், 20ல், இதற்கான விழா நடக்கிறது. பிரான்ஸ் நாட்டின், ராணுவ உயர் அதிகாரிகள், ரபேல் விமானத்தை தயாரிக்கும், டசால்ட் நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், இந்தியாவிடம் முதல் ரபேல் விமானத்தை ஒப்படைக்கின்றனர்.இந்த விமானத்தை பெற்றுக் கொள்ள, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், விமானப்படை தலைமை தளபதி, பி.எஸ்.தனோவா ஆகியோர் தலைமையில், விமானப்படை உயர் அதிகாரிகள், 'பைலட்'கள் அடங்கிய குழு, பிரான்ஸ் செல்கிறது.


வசதிகள்



இது பற்றி, விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்ததாவது: இந்தியாவுக்கு வழங்கப்படும் ரபேல் விமானங்கள், அதி நவீன வசதிகள் கொண்டவையாக இருக்கும். பிரான்ஸ் ராணுவத்திடம் உள்ளதை விட, அதிக வசதிகள் கொண்டவை.ரபேல் போர் விமானங்களை இயக்க, விமானப்படை பைலட்கள் சிலருக்கு, பிரான்சில் பயிற்சியளிக்கப்பட்டு உள்ளது.ரபேல் போர் விமானம், இந்தியா வந்த பின், விமானப்படையின், 24 பைலட்கள், மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு, அவர்கலுக்கு தீவிர பயிற்சிஅளிக்கப்படும்.

அடுத்த ஆண்டு, மே வரை, இந்த பயிற்சி நீடிக்கும்.ரபேல் போர் விமானங்களை இயக்குவதற்காக, ஹரியானா மாநிலம் அம்பாலா, மேற்கு வங்க மாநிலம் ஹாஷிமாரா ஆகிய இடங்களில் உள்ள விமானப்படை தளங்களில், தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும்.


நிலப் பிரச்னை



உத்தர பிரதேசத்தின் சரஸ்வத் விமானப்படை தளத்தில், நிலம் கொள்முதல் பிரச்னையால், ரபேல் போர் விமானப் படைப்பிரிவை ஏற்படுத்தும் திட்டம், கைவிடப்பட்டுஉள்ளது. அடுத்த, மூன்று ஆண்டுகளில், 36 ரபேல் விமானங்களும், இந்தியாவுக்கு வந்து சேர்ந்துவிடும்.ரபேல் போர் விமானங்கள் வந்துவிட்டால், பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத முகாம்களை, நம் விமானப்படை தளத்தில்இருந்தே அழிக்க முடியும்.இவ்வாறு, ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.


மேலும், 36 விமானங்கள்வழங்க முடிவு



இந்தியாவுக்கு, கூடுதலாக, 36 ரபேல் போர் விமானங்களை வழங்க, பிரான்ஸ் முடிவு செய்துள்ளது.இது பற்றி பிரான்ஸ் ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது:இந்தியாவுக்கு, கூடுதலாக, 36 ரபேல் போர் விமானங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது,. 'ஜி - 7' அமைப்பு மாநாட்டுக்காக, பிரான்சுக்கு வந்துள்ள பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோனை சந்தித்து பேசுவார்.

அப்போது, இது தொடர்பான திட்டங்கள், ஒப்பந்தங்கள் முடிவாகும்.கூடுதலாக வழங்கப்பட உள்ள, 36 விமானங்கள் விலை, ஒப்பந்தப்படி வழங்கப்பட உள்ள, 36 விமானங்களின் விலையை விட குறைவாக இருக்கும்.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் கூறின.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
parthiban s - kolkata,இந்தியா
23-ஆக-201921:24:18 IST Report Abuse
parthiban s இந்தியா ஒரு ஏழை நாடு ரஃபேல் போன்ற விலை அதிகமான விமானங்கள் வாங்க பணமில்லை என்று அப்போதைய ராணுவ அமைச்சர் எ கே ஆன்டனி பார்லிமென்டில் அறிவித்தார். கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஆயுதங்கள் வாங்க ஒப்பந்தம் செய்து உள்ளது மோடி அரசு.அதற்க்காக பாதி பணம் அட்வான்ஸ் ஆக கொடுத்து விட்டார். இப்போது இந்திய அரசு க்கு வரும் வருமானம் காங்கிரஸ் ஆட்சியில் எங்கே போனது?
Rate this:
Cancel
23-ஆக-201916:23:27 IST Report Abuse
சேரன் செங்குட்டுவன் நீ கலக்கு சித்தப்பா
Rate this:
Cancel
Balamurugan Balamurugan - cuddalore,இந்தியா
23-ஆக-201909:58:19 IST Report Abuse
Balamurugan Balamurugan பாஜகவின் ஆட்சியில் மட்டுமே பாரதம் தலை நிமிர்கிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X