ஊழல் வழக்கில் சிறை சென்ற தலைவர்கள்

Updated : ஆக 24, 2019 | Added : ஆக 22, 2019 | கருத்துகள் (29)
Advertisement
 ஊழல், வழக்கில், சிறை, சென்ற ,தலைவர்கள்

புதுடில்லி: ஐ.என்.எக்ஸ்., மீடியா வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிதம்பரத்தை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்திருக்கும் நிலையில், சிறை சென்ற சில மூத்த தலைவர்கள் பற்றியும், அவர்கள் சிக்கிய ஊழல் வழக்குகள் குறித்தும் ஒரு பார்வை:


லாலு பிரசாத் யாதவ்:



பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், 1990ல், முதல்வராக பதவி வகித்த போது, மட்டுத் தீவனம் வாங்கியதில், 900 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இது தொடர்பாக, லாலு பிரசாத் மீது, மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. மூன்று வழக்கு விசாரணைகளும் முடிவடைந்து, 2019ல் வழங்கப்பட்ட இறுதி தீர்ப்பில், லாலு பிரசாத்துக்கு, 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவர், ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள, பிர்சா முண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


ஜெயலலிதா:



தமிழக முன்னாள் முதல்வரும், அ.தி.மு.க., பொது செயலருமான மறைந்த ஜெயலலிதா, 1991 - 96 வரை, முதல்வராக பதவி வகித்த போது, வருமானத்துக்கு அதிகமாக, 66.65 கோடி ரூபாய் அளவுக்கு, சொத்து குவித்ததாக, குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கில், அவருக்கு நான்காண்டு சிறை தண்டனையும், 100 கோடி ரூபாய் அபராதமும் விதித்து, பெங்களூர் நீதிமன்றம், 2014ல் தீர்ப்பளித்தது.இந்நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்ட ஜெயலலிதாவுக்கு, 21 நாட்களுக்கு பின், ஜாமின் வழங்கப்பட்டது. உடல் நலக்குறைவு காரணமாக, 2016 டிசம்பரில் அவர் காலமானார்.


பங்காரு லக்ஷ்மண்:



மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில், 1999 முதல் 2000 வரை, மத்திய ரயில்வே இணை அமைச்சராக பதவி வகித்தவர் பங்காரு லக்ஷ்மண். இவர், 2000 முதல் 2001 வரை, பா.ஜ., தேசிய தலைவராக பதவி வகித்தார். அப்போது, ராணுவத்தில் பைனாகுலர்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை பெற்று தர, ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கில், இவருக்கு நான்காண்டு சிறை தண்டனை விதித்து, டில்லி நீதிமன்றம், 2012ல் தீர்ப்பளித்தது. இதையடுத்து, டில்லியில் உள்ள திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமினில் வெளியே வந்த பங்காரு லக்ஷ்மண், 2014ல் காலமானார்.


ராஜா:


பிரதமர் மன்மோன் சிங் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், தி.மு.க.,வை சேர்ந்த ராஜா, மத்திய தகவல் தொடர்புதுறை அமைச்சராக பதவி வகித்தார். 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில், சிக்கி, 2011, பிப்ரவரியில், திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். 15 மாத சிறை தண்டனைக்கு பிறகு, 2012, மே மாதம், அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் இருந்து, 2017ல் அவர் விடுவிக்கப்பட்டார்.


கனிமொழி:



தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க., தலைவருமான, மறைந்த கருணாநிதியின் மகள் கனிமொழி மீது, 2ஜி அலைக்கற்றை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டது. இதில், 2011, மே மாதம் கைது செய்யப்பட்ட கனிமொழி, ஆறு மாதங்கள், திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமினில் வெளியே வந்தார். இந்த வழக்கில், அரசு தரப்பு, குற்றச்சாட்டை நிரூபிக்க தவறியதை அடுத்து, 2017ல் அவர் விடுவிக்கப்பட்டார்.


எடியூரப்பா:



கர்நாடக முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான எடியூரப்பா, சட்ட விரோத சுரங்க முறைக்கேடு ஊழலில் சிக்கி, 2011ல் தனது முதல்வர் பதவியை இழந்தார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, 23 நாட்கள் சிறையில் இருந்தார். பின், அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. 2016ல், சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம், எடியூரப்பாவை, இந்த வழக்கில் இருந்து விடுவித்தது.


சுரேஷ் கல்மாடி:



மன்மோகன் சிங் தலைமையிலான ஐ.மு.,கூட்டணியில், மத்திய ரயில்வே இணை அமைச்சராக பதவி வகித்தவர் சுரேஷ் கல்மாடி. இவர், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பதவி வகித்தார். 2010ல் நடந்த காமல்வெல்த் போட்டிகளுக்காக வழங்கப்பட்ட ஒப்பந்தங்களில், ஊழல் நடந்துள்ளதாக, புகார் எழுந்தது. இந்த வழக்கில், சுரேஷ் கல்மாடி கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். ஒன்பது மாத சிறை தண்டனைக்கு பிறகு, அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. ஊழல் வழக்கில் சிக்கியதால், காங்.,கில் இருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.

Advertisement




வாசகர் கருத்து (29)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RAMESH - CHENNAI,இந்தியா
26-ஆக-201916:06:46 IST Report Abuse
RAMESH we people elected Raja and Kani again. its really wondering........
Rate this:
Share this comment
Cancel
Rajesh - Delhi,இந்தியா
23-ஆக-201923:22:33 IST Report Abuse
Rajesh குற்றம் புரிந்து சிறை சென்ற திருடர்கள் என்று போட வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
PANDA PANDI - Aththipatti,இந்தியா
23-ஆக-201922:32:17 IST Report Abuse
PANDA PANDI ஊழல் செய்தல் தவறு. சரி. கொலை செய்தல் அதுவும் அப்பாவிகளை சரியாய் தோன்றுகிறதா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X