அதிகம் சம்பாதிக்கும் நடிகர் அக் ஷய் குமார்

Added : ஆக 22, 2019 | கருத்துகள் (1)
Share
Advertisement
 அதிகம் சம்பாதிக்கும் நடிகர்  அக் ஷய் குமார்

லாஸ் ஏஞ்சல்ஸ்: உலக அளவில், அதிக வருமானம் ஈட்டும் நடிகர்கள் பட்டியலில், பல முன்னணி, 'ஹாலிவுட்' நடிகர்களை பின்னுக்கு தள்ளி, 'பாலிவுட்' நடிகர், அக் ஷய் குமார், நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.அமெரிக்காவைச் சேர்ந்த, 'போர்ப்ஸ்' பத்திரிகை, உலக அளவில், அதிக வருமானம் ஈட்டும் நடிகர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதில், ஹாலிவுட் நடிகர்கள், ட்வைன் ஜான்சன், கிறிஸ் ஹெம்ஸ்வர்த், ராபர்ட் டவுனி ஜூனியர் ஆகியோர், முதல் மூன்று இடங்களை பிடித்துள்ளனர்.பல, முன்னணி ஹாலிவுட் நடிகர்களை பின்னுக்கு தள்ளி, பாலிவுட் நடிகர் அக் ஷய் குமார், நான்காவது இடத்தை பிடித்துள்ளார்.இவர், ஜூன் 2018 முதல், ஜூன் 2019 வரை, திரைப்படங்கள் மற்றும் பல்வேறு விளம்பரங்கள் வாயிலாக, 455 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி உள்ளதாக, அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.நடிகர் அக் ஷய் குமாருக்கு அடுத்து, ஐந்தாவது இடத்தில், நடிகர் ஜாக்கி சான் இடம் பிடித்துள்ளார். இவரது ஆண்டு வருமானம், 406 கோடி ரூபாய் என, குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
23-ஆக-201901:38:19 IST Report Abuse
Allah Daniel எங்க அண்ணன் உதயநிதி எத்தினாவது இடம்னு சொல்லவே இல்லை..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X