பொது செய்தி

இந்தியா

சி.பி.ஐ.,க்கு ஒத்துழைக்க மறுத்து சிதம்பரம்... அடம்!

Updated : ஆக 23, 2019 | Added : ஆக 22, 2019 | கருத்துகள் (24)
Share
Advertisement

புதுடில்லி: மும்பையைச் சேர்ந்த, 'ஐ.என்.எக்ஸ்., மீடியா' வழக்கில், தங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்காமல், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான, சிதம்பரம், அடம் பிடிப்பதாக, சிறப்பு நீதிமன்றத்தில், சி.பி.ஐ., தெரிவித்தது. இதையடுத்து, சிதம்பரத்தை, நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, நீதிமன்றம் அனுமதி அளித்தது.latest tamil news


வியாழன் மாலை டில்லி ரோஸ் அவென்யூவில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் சிதம்பரம் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்கு சிதம்பரம் ஒத்துழைக்கவில்லை. அதனால் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டுமென சி.பி.ஐ. தரப்பு வாதிட்டது.காங்கிரஸ் தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, 2004 முதல், 2014 வரை மத்தியில் ஆட்சியில் இருந்த போது, நிதி மற்றும் உள்துறை அமைச்சராக பணியாற்றவர், மூத்த காங்., தலைவர், சிதம்பரம், 73. அந்த ஆட்சியின்போது, மும்பையைச் சேர்ந்த, ஐ.என்.எக்ஸ்., மீடியா என்ற நிறுவனம், அன்னிய முதலீட்டை பெறுவதற்கு, 2007ல் அனுமதி கோரியது.


latest tamil news

INX Media case
வழக்குப் பதிவுஅந்த நிறுவனத்தில், 305 கோடி ரூபாய் அன்னிய முதலீடு செய்ய அனுமதி வழங்கியதில், மோசடி நடந்ததாக, 2017ல், சி.பி.ஐ., வழக்குப் பதிவு செய்தது. இந்த பண மோசடி குறித்து, அமலாக்கத் துறை, கடந்தாண்டு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.இந்த நிறுவனத்துக்கு, மத்திய நிதி அமைச்சராக இருந்த சிதம்பரத்தின் மகன் கார்த்தியின் தலையீட்டினால் தான், அன்னிய முதலீடு பெற அனுமதி வழங்கப்பட்டதாக, வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.


latest tamil news

INX Media case
இந்த வழக்கு தொடர்பாக, சிதம்பரத்தை, சி.பி.ஐ., அதிகாரிகள் ஒரு முறை விசாரித்துஉள்ளனர். அதே நேரத்தில், அவருடைய மகன் கார்த்தியிடம் பலமுறை விசாரிக்கப்பட்டுள்ளது. மேலும், அவருடைய வீடு மற்றும் அலுவலகத்தில் அதிரடி சோதனைகள் நடத்தப்பட்டன. கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அவர், தற்போது ஜாமினில் உள்ளார்.இந்நிலையில், முன்ஜாமின் கோரி, சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் சமீபத்தில் தள்ளுபடி செய்தது. அதைத் தொடர்ந்து, சிதம்பரம், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.


latest tamil news

INX Media case


விளக்கம்கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க முயன்ற அவருடைய முயற்சி பலிக்கவில்லை. அவருடைய மனுவை, அவசரமாக விசாரிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்தது.இதற்கிடையே, 24 மணி நேரத்துக்கு மேலாக, தலைமறைவாக இருந்த சிதம்பரம், நேற்று முன்தினம் இரவு, திடீரென, காங்., தலைமையகத்துக்கு வந்து, மாயமானது தொடர்பாக விளக்கம் அளித்தார். அங்கிருந்து வீட்டுக்குச் சென்ற அவரை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்து, சி.பி.ஐ., தலைமையகத்துக்கு கொண்டு சென்றனர். அங்கே, அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அதன் பின், நேற்று மாலையில், டில்லியில் உள்ள, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். 'அவரை, ஐந்து நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்' என, சி.பி.ஐ., தரப்பில் கோரப்பட்டது. ஆனால், இதற்கு, சிதம்பரம் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.'இந்த வழக்கில் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார்; பல கேள்விகள் கேட்டும் பதிலளிக்க மறுக்கிறார். அதனால், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்' என, சி.பி.ஐ., தரப்பில், சொலிசிட்டார் ஜெனரல், துஷார் மேத்தா வாதிட்டார்.

அதைத் தொடர்ந்து, சிதம்பரத்தை, வரும், 26ம் தேதி வரை, நான்கு நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, சி.பி.ஐ.,க்கு அனுமதி அளித்து, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, அஜய் குமார் குஹார் உத்தரவிட்டார்.முன்னதாக விசாரணையின்போது, துஷார் மேத்தா வாதிட்டதாவது:சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை மறுத்து, டில்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ள கருத்துக்களை கவனத்தில் கொள்ள வேண்டும். முக்கிய குற்றவாளியாக கருதப்படும், சிதம்பரம், மற்றவர்களுடன் இணைந்து குற்றவியல் சதி செய்துள்ளார். காவலில் எடுத்து விசாரித்தால்தான், இந்த வழக்கில் பல உண்மைகள் தெரியவரும்.இவ்வாறு, அவர் வாதிட்டார்.

சிதம்பரம் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், கபில் சிபில் வாதிட்டதாவது:நேற்று முன்தினம் இரவே அவரை கைது செய்துள்ளனர். ஆனால், காலை 11:00 மணி வரை அவரிடம் எந்தக் கேள்வியையும், சி.பி.ஐ., கேட்கவில்லை. இதில் இருந்தே, அவரிடம் விசாரிக்க அவர்களிடம் எதுவும் இல்லை என்பது தெளிவாகிறது. இந்த வழக்கில், சிதம்பரத்தின் மகன், கார்த்தி உள்பட குற்றம்சாட்டப்பட்ட மற்றவர்கள், ஜாமினில் உள்ளனர். அதனால், தனிமனித சுதந்திரத்தை மதித்து, அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கூடாது.இவ்வாறு, அவர் வாதிட்டார்.


சிதம்பரம் வாதிட்டார்!சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று விசாரணை நடந்தபோது, தனது தரப்பில் சில வாதங்களை முன்வைக்க, சிதம்பரம் அனுமதி கேட்டார். ஆனால், அதற்கு, சொலிசிட்டார் ஜெனரல், துஷார் மேத்தா எதிர்ப்பு தெரிவித்தார்.'வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர், தனக்காக வாதிடலாம் என்று டில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது' என, சிதம்பரம் சார்பில் ஆஜரான, அபிஷேக் மனு சிங்வி கூறினார். அதையடுத்து, சிதம்பரம் வாதிட, நீதிபதி அனுமதி அளித்தார். அப்போது, சி.பி.ஐ., கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் தான் பதிலளித்ததாக, சிதம்பரம் கூறினார்.


தொடர் விசாரணைநேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்ட சிதம்பரம், சி.பி.ஐ., அலுவலகத்தில் உள்ள, விருந்தினர் அறையில் தங்க வைக்கப்பட்டிருந்தார். நேற்று காலையில், பகலுணவு வழங்கப் பட்டது. அதைத் தொடர்ந்து, 10:20 மணி முதல், அவரிடம், சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரித்தனர். துணை எஸ்.பி., ஆர். பார்த்தசாரதி தலைமையிலான அதிகாரிகள், 100க்கும் மேற்பட்ட கேள்விகளை அவரிடம் கேட்டதாக தெரிகிறது.


அதிகாரி மாற்றம்ஐ.என்.எக்ஸ்., மீடியா தொடர்பான வழக்கை விசாரித்து வந்த, அமலாக்கத் துறை விசாரணை அதிகாரி, ராகேஷ் அஹுஜா, மீண்டும் டில்லி போலீசுக்கு மாற்றப்பட்டார். அமலாக்கத் துறையில் அவருடைய பதவிக் காலம் முடிந்ததால், மீண்டும் டில்லி போலீசுக்கே அனுப்பப்பட்டதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.பானுமதி அமர்வு விசாரணைமுன்ஜாமின் மனுவை ரத்து செய்யும் டில்லி உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, சிதம்பரம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை, நீதிபதிகள், ஆர். பானுமதி, ஏ.எஸ். போபண்ணா அடங்கிய, உச்ச நீதிமன்ற அமர்வு இன்று விசாரிக்க உள்ளது.

உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில், 20ம் தேதியே மனு தாக்கல் செய்யப் பட்டது. ஆனால், அதை உடனடியாக விசாரிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்தது. நேற்று முன்தினம், சிதம்பரம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் பலமுறை போராடியும், அவசரமாக விசாரிக்க மறுத்த உச்ச நீதிமன்றம், இன்று அது விசாரிக்கப்படும் என, அறிவித்திருந்தது.


திறப்பு விழாவில் பங்கேற்றவர்சி.பி.ஐ., தலைமையகம் அமைந்துள்ள கட்டடம், 2011ல், திறந்து வைக்கப்பட்டது. பிரதமராக இருந்த காங்.,கைச் சேர்ந்த மன்மோகன் சிங், இந்தக் கட்டடத்தை திறந்து வைத்தார். திறப்பு விழாவில், அப்போது உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரம், சட்ட அமைச்சராக இருந்த வீரப்ப மொய்லி, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த கபில் சிபில் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தற்போது, அதே கட்டடத்தில் அமைந்துள்ள விருந்தினர் அறையில், சிதம்பரம் தங்க வைக்கப்பட்டுள்ளார். அப்போது, சி.பி.ஐ., இயக்குநராக இருந்த, ஏ.பி. சிங், கட்டடத்தை அவர்களுக்கு சுற்றி காண்பித்தார்.

இந்நிலையில், 'இந்த கட்டடத்தில் ஏதாவது வாஸ்து பிரச்னை இருக்குமா' என, சி.பி.ஐ., அதிகாரிகள் சிலர் கிண்டல் செய்துள்ளனர். அதற்கு காரணம், மயான பூமியாக இருந்த இடத்தில் இந்தக் கட்டடம் கட்டப் பட்டுள்ளது. சி.பி.ஐ., இயக்குநராக இருந்த, ஏ.பி., சிங், அவருக்கு அடுத்ததாக வந்த, ரஞ்சித் சின்ஹா ஆகியோர் மீது, சில குற்றச்சாட்டுகளில், சி.பி.ஐ., யாலேயே வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதன்பிறகு இயக்குநராக இருந்த, அனில் சின்ஹா, தொழிலதிபர் விஜய் மல்லையா தப்பிக்க உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டார். இயக்குநராக இருந்த அலோக் வர்மா, சிறப்பு இயக்குநராக இருந்த ராஜேஷ் அஸ்தானாவுடன் ஏற்பட்ட பிரச்னையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

Advertisement
வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
23-ஆக-201922:45:47 IST Report Abuse
Pugazh V ப.சிதம்பரத்த தொட முடியாது. அதலபாதாளத்திற்குப் போய்விட்ட இந்திய பொருளாதார நிலை மற்றும் அதன் பாதிப்பு களிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப இந்த நாடகம்
Rate this:
Krish Sami - Trivandrum,இந்தியா
24-ஆக-201909:35:04 IST Report Abuse
Krish Samiபாருங்க, சார் Oxford லா அத்தாரிட்டி தீர்ப்பு சொல்லிவிட்டார். இவர்தான் மற்றவர்களை கேம்பிரிட்ஜ் லா படித்தவரா என கேலி பேசியவர். ஹாஹாஹா...
Rate this:
Cancel
வல்வில் ஓரி - தயிர் வடை, நரசொலி,இந்தியா
23-ஆக-201915:49:16 IST Report Abuse
வல்வில் ஓரி நீ நிதியமைச்சர்.. உன் மகன் கன்சல்டிங் கம்பனி ஓனர்.. அதுவும் என்ன கன்சல்டிங்?? உள்நாட்டுக் கம்பெனிகள் எல்லாம் வெளிநாட்டிலிருந்து முறையற்ற வகையில் நிதியை உள்ளே எப்படி கொண்டு வருவது என்ற கன்சல்டிங்.. இந்த இரண்டே வரியிலேயே நீ குற்றம் செய்ததற்கான ஆதாரம் இருக்கிறது நான் மட்டும் நீதிபதியாக இருந்தால் இன்னைக்கு சாயந்தரமே தீர்ப்பு உனக்கு ...
Rate this:
Cancel
N S Sankaran - Chennai,இந்தியா
23-ஆக-201913:08:17 IST Report Abuse
N S Sankaran இப்போவே வீட்டு சாப்பாடெல்லாம் மறப்பது நல்லது. திடீரென்று களி தின்ன ஆரம்பிப்பது கஷ்டம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X