'மாஜி' துணை முதல்வர் சிக்கினார்: வங்கியில் ரூ.1,000 கோடி மோசடி

Updated : ஆக 23, 2019 | Added : ஆக 22, 2019 | கருத்துகள் (10)
Advertisement
'மாஜி', துணை முதல்வர்,சிக்கினார்,வங்கியில்,ரூ.1,000 கோடி மோசடி

மும்பை, கூட்டுறவு வங்கியில், 1,000 கோடி ரூபாய் முறைகேட்டில் ஈடுபட்ட, மஹாராஷ்டிரா முன்னாள் துணை முதல்வரும், தேசியவாத காங்., மூத்த தலைவருமான அஜித் பவார் உட்பட, 70 பேர் மீது, எப்.ஐ.ஆர்.,எனப்படும், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யுமாறு, மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மஹாராஷ்டிராவில், முதல்வர், தேவேந்திர பட்னவிஸ் தலைமையில், பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கே, தேசியவாத காங்., கட்சி சார்பில், துணை முதல்வராக பதவி வகித்தவர் அஜித் பவார்.
இவர், 2007 முதல், 2011 வரை, மஹாராஷ்டிரா மாநில கூட்டுறவு வங்கியின் இயக்குனராக பதவி வகித்தார்.அந்த காலகட்டத்தில், ரிசர்வ் வங்கி விதிமுறைகளை மீறி, பல்வேறு நிறுவனங்களுக்கு கடன் வழங்கி, அதை திரும்ப வசூலிக்காமல், வங்கிக்கு 1,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்படுத்தியது தெரியவந்தது.இது தொடர்பாக, 'நபார்டு' வங்கி நடத்திய தணிக்கையில், அஜித் பவார் உட்பட, 34 மாவட்டங்களில் உள்ள கூட்டுறவு வங்கி கிளைகளின் உயர் அதிகாரிகள், முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இது தொடர்பாக, நபார்டு வங்கி அறிக்கை தாக்கல் செய்தது.இதையடுத்து, கூட்டுறவு வங்கி முறைகேட்டில் ஈடுபட்ட, அஜித் பவார் உள்ளிட்டோர் மீது, பொருளாதார குற்றப்பிரிவில், சுரீந்தர் அரோரா என்ற சமூக ஆர்வலர், புகார் அளித்தார்.மேலும், இந்த வழக்கில், முதல் தகவல் அறிக்கை எனப்படும், எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய, உத்தரவிட வேண்டும் என, மும்பை உயர் நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தார்.இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, நபார்டு வங்கி அறிக்கையின் அடிப்படையில், ஊழல் நடந்ததற்கான முகாந்திரம் இருப்பதாக கூறிய நீதிபதிகள், அஜித் பவார் உள்ளிட்ட, 70 பேர் மீது, ஐந்து நாட்களுக்குள், எப்.ஐ.ஆர்., பதிவு செய்யுமாறு, பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N S Sankaran - Chennai,இந்தியா
23-ஆக-201916:07:57 IST Report Abuse
N S Sankaran இவனுடைய சித்தப்பா சரத் பவார் தான் மஹாராஷ்ராத்தின் கருணாநிதி. மேற்கு இந்தியாவில் ஊழலின் முன்னோடி.
Rate this:
Share this comment
Cancel
23-ஆக-201912:43:47 IST Report Abuse
kulandhai Kannan காங்கிரஸில் ஒருத்தனும் யோக்கியனில்லை. எனவேதான் பாதுகாப்பிற்காக, நேரு குடும்பத்தின் அடிமை வம்சமாக மாறிவிட்டனர்.
Rate this:
Share this comment
Cancel
TamilArasan - Nellai,இந்தியா
23-ஆக-201910:13:32 IST Report Abuse
TamilArasan அறுபது ஆண்டுகளாய் இந்த காங்கிரஸ் கொள்ளைக்காரர்கள் நாட்டை இப்படித்தான் ஆட்டை போட்டுள்ளார்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X