அரசியல் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க.,வை தடைசெய்ய சதி:முத்தரசன் குற்றச்சாட்டு

Added : ஆக 22, 2019
Advertisement

சிவகங்கை, தேசவிரோத கட்சி என்று கூறி தி.மு.க.,வை தடை செய்ய சதி நடக்கிறது, என இந்திய கம்யூ., மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.சிவகங்கையில் அவர் கூறியதாவது: ஒரே நாடு, ஒரே தேசமக்கள், ஒரே நதி நீர் ஆணையம், ஒரே கல்விக்கொள்கை, ஒரே மொழி என்று கூறி கடைசியில் ஒரே நாடு ஒரே கட்சி என்ற நிலையை நோக்கி பா.ஜ., செல்கிறது. காஷ்மீர் குறித்த மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க., வை சுதந்திர தினத்தை கொண்டாடுவதில்லை, தேசியக்கொடியை ஏற்றுவதில்லை என்று தேச துரோக குற்றச்சாட்டை பரப்பி, அக்கட்சி தடை செய்வதே பா.ஜ.,வின் நோக்கம்.எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்தி வரும் பா.ஜ.,வின் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாகத்தான் சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார். பா.ஜ.,ஆட்சியில் சி.பி.ஐ., வருமானவரித்துறை, அமலாக்கத்துறை சுதந்திரமாக செயல்படவில்லை. தமிழகத்தில் மராமத்து பணிகளுக்காக ஒதுக்கப்படும் பணம் விரயமாக்கப்படுகிறது, என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X