சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலியல் புகார் பேராசிரியர் டிஸ்மிஸ்

Added : ஆக 22, 2019 | கருத்துகள் (11)
Advertisement
பாலியல் புகார் பேராசிரியர் டிஸ்மிஸ்

மதுரை, மதுரை காமராஜ் பல்கலை ஆராய்ச்சி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பேராசிரியர் கர்ணமகாராஜனுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டது.இப்பல்கலை திரைப்படம் மற்றும் மின்னணு ஊடகவியல் துறை பேராசிரியராக 2013 முதல் பணியாற்றியவர் கர்ணமகாராஜன்,49. கேரள மாணவிக்கு பி.எச்.டி., வழிகாட்டியாக இருந்தார். அப்போது பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தாக அவர் மீது மாணவி புகார் அளித்தார்.பாலியல் புகார்களை விசாரிக்கும் பல்கலை ஐ.சி.சி., கமிட்டி விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்தது. மாணவி பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டு, பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தது.இந்நிலையில் பிப்.,5ல் பல்கலையில் நடந்த சிண்டிகேட் கூட்டத்தில், கர்ணமகாராஜனுக்கு கட்டாய ஓய்வு அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது.இந்நிலையில் துணைவேந்தர் கிருஷ்ணன் தலைமையில் அவசர சிண்டிகேட் கூட்டம் நேற்று நடந்தது. இதையடுத்து கர்ணமகாராஜனுக்கு கட்டாயஓய்வுக்கான உத்தரவு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - kadappa,இந்தியா
26-ஆக-201922:57:22 IST Report Abuse
oce குறுக்குவழியில் டிகிரி வாங்கியவன்கள்.
Rate this:
Share this comment
Cancel
Jayvee - chennai,இந்தியா
26-ஆக-201916:40:08 IST Report Abuse
Jayvee இன்று பெண்கள் PHd செய்யவேண்டுமென்றால் இந்த நாய்களை அனுசரித்து செல்லவேண்டிய கட்டாயம் உள்ளது. UGC இதில் தலை இட்டு மாறு வழி கண்டுபிடிக்கவேண்டும்.. ஆடோனோமோஸ் கல்லூரிகளில் இது சாதாரணம்.. பெரும்பாலான ஆண் HOD கல் இதை வைத்து மாணவிகளை கொடுமைப்படுத்திக்கின்றனர். இதில் சென்னையில் உள்ள இரண்டு பிரபல மினாரிட்டி கலோரிகளும் அடக்கம்
Rate this:
Share this comment
Cancel
Ajit Kumar vanniyan - Chennai,இந்தியா
26-ஆக-201912:43:25 IST Report Abuse
Ajit Kumar vanniyan பெருமாளின் பயம் இல்லை மனித குலத்திற்கு
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X