சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாக். பயங்கரவாதிகள் ஊடுருவல்? தமிழகத்தில் 'அலர்ட்'

Updated : ஆக 23, 2019 | Added : ஆக 22, 2019 | கருத்துகள் (12)
Advertisement
பாக்.,பயங்கரவாதிகள், ஊடுருவல்?, தமிழகத்தில் ,'அலர்ட்'

கோவை, தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின்போது தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக வந்த உளவுத்தகவலை அடுத்து போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். கோவையில் நேற்றிரவு முதல் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் விநாயகர்சதுர்த்தி விழாவைவிமரிசையாக கொண்டாட இந்து அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. கோவை மாநகரில் ஏறத்தாழ 1000 சிலைகளும் புறநகரில் 5000 சிலைகளும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்படவுள்ளன. இதையொட்டி விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில் இலங்கை தேவாலயங்களில் நடந்த வெடிகுண்டு தாக்குதல்களைப் போன்று தமிழகத்தில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தின் போது தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாகவும் இதற்காக இலங்கை பாகிஸ்தான் வங்கதேசத்திலிருந்து நான்கு பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவியிருப்பதாகவும் மத்திய உளவுப்பிரிவு உஷார் படுத்தியிருக்கிறது. குறிப்பாக கோவை நகர் முக்கிய இலக்காக இருக்க வாய்ப்புள்ளதாகவும் அதில் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். கோவையில் நேற்றிரவு முதல் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில் 'மக்கள் அதிகம் கூடும் பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன், ஷாப்பிங் மால், வழிபாட்டு தலங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது முன்னெச்சரிக்கை நடவடிக்கைதான். கேரளா மாநிலம் கொச்சியைச் சேர்ந்த ரகீம் பற்றிய சில தகவல்கள் கிடைத்துள்ளன. வாகன சோதனையின்போது அவரையும் தேடி வருகிறோம்' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajan - Alloliya ,இந்தியா
23-ஆக-201922:30:57 IST Report Abuse
Rajan பாக்கிஸ்த்தான் ஹீரோ சூசை நேத்து, இன்னிக்கி அவங்க கூட்டாளிகள் இஙக, அவங்கள போலீஸ் கண்டு பிடிக்கணும்னா, அறிவாலயம் மற்றும் தி மு க கட்சி ஆபீஸ் ல தேடி பாருங்க
Rate this:
Share this comment
Cancel
ரபேல் ராகுல் பாய் - வயநாடு தொகுதி,இந்தியா
23-ஆக-201910:03:56 IST Report Abuse
ரபேல் ராகுல் பாய் அடப்பாவிங்களா... ஏற்கனவே இங்க ஒரு திருட்டு கழக கூட்டம் இருக்கு சுடலை, குருமா, வாந்தி, சைக்கோ இவர்களுக்கு போட்டியா இன்னொரு தீவிரவாத கூட்டமா? இவர்கள் பிடியில் இருந்து தமிழகத்தை இறைவன் தான் காப்பாற்றவேண்டும்...
Rate this:
Share this comment
Cancel
வல்வில் ஓரி - Koodal,இந்தியா
23-ஆக-201908:12:52 IST Report Abuse
வல்வில் ஓரி திமுக வொட எக்கச்சக்கமான சொத்துக்கள் பாகிஸ்தானில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிறதாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X