கத்தோலிக்க கல்வி நிறுவன சங்கத்தினர் கல்வித் துறை எதிரில் ஆர்ப்பாட்டம்

Added : ஆக 23, 2019
Advertisement
 கத்தோலிக்க கல்வி நிறுவன சங்கத்தினர் கல்வித் துறை எதிரில் ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி:ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்தக்கோரி, கத்தோலிக்க கல்வி நிறுவன சங்கத்தினர், கல்வித்துறை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், மாத இறுதிநாளில் சம்பளம் வழங்க வேண்டும், அரசு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள், நிர்வாக மானியம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கத்தோலிக்க கல்வி நிறுவன சங்கம் சார்பில் கல்வித்துறை அலுவலகம் முன்பு நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.சங்க துணைத் தலைவர் அருளானந்தம் தலைமை தாங்கினார். செயலாளர் சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சம்மேளன கவுரவ தலைவர் பாலமோகன் உரையாற்றினார். வின்சென்ட்ராஜ் தொகுத்து வழங்கினார்.போராட்டத்தில் அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், ஊழியர்கள், நிர்வாகிகள், தலைமை ஆசிரியர்கள், அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன பொறுப்பாளர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.கோரிக்கைகளை நிறைவேற்றவிட்டால் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும்போது சட்டசபை முன்பு மறியலில் ஈடுபட்டு சிறை செல்வது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக, கத்தோலிக்க கல்வி நிறுவன சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X