பொது செய்தி

தமிழ்நாடு

ஆட்சிமொழி பயிலரங்கு

Added : ஆக 23, 2019
Advertisement

திருப்பூர்:தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடந்த, ஆட்சிமொழி பயிலரங்கு நேற்றுடன் நிறைவடைந்தது.தமிழ் வளர்ச்சித்துறை சார்பில், ஆண்டுதோறும் ஆட்சிமொழி பயிலரங்கு நடத்தப்படுகிறது. அதன்படி, இருநாள் பயிலரங்கு மற்றும் கருத்தரங்கு நேற்று முன்தினம் துவங்கியது. கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த கருத்தரங்கை, துணை இயக்குனர் விஜயலட்சுமி துவக்கி வைத்தார்.தமிழ் பேராசிரியர்கள் சிவக்குமார், கதிரேசன், முன்னாள் உதவி இயக்குனர்கள் குமார், ஆறுமுகம் உள்ளிட்ட, தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர். ஆட்சிமொழி வரலாறு, அரசு அலுவலகங்களில் பின்பற்ற வேண்டிய தமிழ் வளர்ச்சித்துறை விதிமுறைகள் குறித்து விளக்கினர். பணிப்பளுவில் சிக்கியிருந்த, அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, தமிழ் பேராசிரியர்கள் நகைச்சுவை ததும்பும் வகையில் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X