அரசியல் செய்தி

தமிழ்நாடு

'தனியார் பள்ளியுடன் போட்டி மட்டுமே!' அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

Added : ஆக 23, 2019
Advertisement
 'தனியார் பள்ளியுடன் போட்டி மட்டுமே!' அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

திருப்பூர்:திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், திண்டுக்கல், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள, 383 மெட்ரிக் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் விழா, திருப்பூர் அவிநாசிபாளையம் ஜெய் ஸ்ரீராம் பொறியியல் கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது.
இதனை, பள்ளி நிர்வாகிகளிடம் வழங்கி அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:கோர்ட் உத்தரவுப்படி பள்ளிகளுக்கு ஆண்டு தோறும் அங்கீகாரம் வழங்கும் வகையில் தமிழகத்தில் இன்னும், 2083 பள்ளிகளுக்கு இந்த ஆணை வழங்க வேண்டியுள்ளது. இதை இரண்டாண்டுக்கு என மாற்றி வழங்கும் வகையில் அரசு பரிந்துரைத்துள்ளது.அரசு பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாற்றங்கள் தனியார் பள்ளிகளை எந்த வகையிலும் பாதிக்காது. பள்ளி நிர்வாகங்கள் எந்த வகையிலும் அச்சமடைய வேண்டாம்.
தனியார் பள்ளிகளுடன் அரசு பள்ளிகளுக்கு போட்டி தானே தவிர, எந்த வகையிலும் பொறாமை இல்லை.தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறை எளிமைப்படுத்தும் வகையில், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து, வெளிப்படைத் தன்மையுடன் பணி மேற்கொள்வது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.இவ்வாறு, அமைச்சர் பேசினார்.முன்னதாக, கலெக்டர் பழனிசாமி தலைமை வகித்தார். அமைச்சர் ராதாகிருஷ்ணன், மெட்ரிக் பள்ளி இயக்குநர் ராமேஸ்வர முருகன், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X