அறுந்த மின்கம்பிகள் விவசாயிகள் அவதி

Added : ஆக 23, 2019
Advertisement

காட்டேரிக்குப்பம்:குமாரப்பாளையத்தில் விவசாய நிலத்தில் அறுந்து விழுந்த மின்கம்பிகள் இதுவரை சீரமைக்கப்படாததால், பாசனம் செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

காட்டேரிக்குப்பம் அடுத்த குமாரப்பாளையம், தேத்தாம்பாக்கம் சங்கராபரணி ஆற்றங்கரையோரம் 500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்து வருகின்றனர்.இந்த நிலங்களில் உள்ள மின் மோட்டார்களுக்கு, தேத்தாம்பாக்கம் துணை மின் நிலையத்தின் மூலம், குமாரப்பாளையம் விநாயகர் கோவில் அருகே உளள் டிரான்ஸ்பார்மரில் இருந்து, மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.டிரான்ஸ்பார்மரில் இருந்து விவசாய நிலங்களுக்கு செல்லும், 4 மின் கம்பிகள் கடந்த 2ம் தேதி, அவ்வழியாக சென்ற லாரி மோதியதில், அறுந்து விழுந்தது. இதனால், மின் விநியோகம் தடைப்பட்டது. இதன் காரணமாக, கடந்த 20 நாட்களுக்கு மேலாக, தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் காயும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.எனவே, குமாரப்பாளையத்தில் விவசாய நிலத்தில் அறுந்துவிழுந்துள்ள மின் கம்பிகளை உடனடியாக சீரமைக்க மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X